உச்ச நீதிமன்றத்தில் “நிபந்தனையற்ற மன்னிப்பு” கேட்ட யோகா குரு பாபா ராம்தேவ்
Ramdev Apology in Supreme Court of India: ஆங்கில மருத்துவம் பற்றி தவறான தகவல்களை பரப்பும் விளம்பரங்கள் வெளியிட்ட விவகாரத்தில் பாபா ராம்தேவ் ஏற்க உச்ச நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார்.
Patanjali Ayurved: பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனத்தின் தவறான விளம்பர வழக்கில் யோகா குரு ராம்தேவ் மற்றும் பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஆச்சார்யா பால்கிருஷ்ணா ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஆஜராகினர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஹிமா கோலி மற்றும் நீதிபதி அஹ்சானுதீன் அமானுல்லா ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த வழக்கில் சமர்ப்பிக்கப்பட்ட இருவரின் பிரமாணப் பத்திரம் எங்கே? எனக் கேட்டதற்கு, ராம்தேவின் வழக்கறிஞர், இருவரும் மன்னிப்பு கேட்டதாகவும், இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராகி இருப்பதாகவும் கூறினார்.
தவறான விளம்பரம் வெளியிட்ட பதஞ்சலி நிறுவனம்
பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் ஆயுர்வேத பொருட்களை விற்பனை செய்து வருகிறது. அந்த பொருட்களை குறித்து விளம்பரம் செய்து வருகிறது பதஞ்சலி நிறுவனம். அதில் பதஞ்சலி நிறுவனம் விற்பனை செய்யும் பொருட்களை மட்டுமே தீராத நோய்களையும் சரி செய்வதாகவும், மற்றவை (அலோபதி மருத்துவம்) எல்லாம் வேஸ்ட் என்ற முறையில் விளம்பரங்கள் வெளியிடப்பட்டது. இந்த விளம்பரங்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின.
இந்திய மருத்துவ சங்கம் கடும் எதிர்ப்பு
இதனையடுத்து, பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் வெளியிட்ட விளம்பரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த இந்திய மருத்துவ சங்கம் (ஐஎம்ஏ), உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. கடந்த ஆண்டுநவம்பர் மாதம் இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், பதஞ்சலியின் விளம்பரங்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. இதுபோன்ற விளம்பரங்களையும் செய்ய வேண்டாம் என எச்சரித்தது. மீறினால் கடுமையான அபராதம் விதிக்கப்படும் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியது.
மேலும் படிக்க - அவங்க அப்பாவால் கூட என்னை கைது செய்ய முடியாது: பாபா ராம்தேவ் வீடியோவால் பரபரப்பு
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மீறி செயல்பட்ட பதஞ்சலி நிறுவனம்
ஆனாலும் உச்ச நீதிமன்றத்தின் எச்சரிக்கையும் மீறி, விளம்பரங்கள் வெளியாகிக் கொண்டே இருந்தன. இதனையடுத்து, பதஞ்சலி நிறுவன விளம்பரத்துக்கு எதிரான வழக்கு மீண்டும் கடந்த மாதம் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது நீதிபதிகள், "உச்ச நீதிமன்றத்தின் உத்தரவையும் மீறி செயல்பட்ட பாபா ராம்தேவ் மற்றும் பதஞ்சலி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான பாலகிருஷ்ணன் ஆகியோருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸை உச்சநீதிமன்றம் வழங்கியது. மேலும் பதஞ்சலியின் தயாரிப்புகளை விளம்பரப்படுத்துவதற்கு தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்ட பாபா ராம்தேவ்
நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பிய பிறகு, தவறான தகவல்களை விளம்பரம் செய்ய மாட்டோம் என என உச்சநீதிமன்றத்தில் பதஞ்சலி நிறுவனம் உறுதி அளித்தது. மேலும் பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஆச்சார்யா பால்கிருஷ்ணா நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார்.
இதனையடுத்து பதஞ்சலி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஆச்சார்யா பால்கிருஷ்ணா மற்றும் யோகா குரு ராம்தேவ் நேரில் ஆஜராக வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
சரமாரியாக கேள்விகளை எழுப்பிய நீதிபதிகள்
இதனையடுத்து, இன்று நேரில் ஆஜாரான பதஞ்சலி நிறுவனத்தின் நிறுவனர்கள் பாபா ராம்தேவ் மற்றும் பாலகிருஷ்ணா ஆகியோர் நேரில் ஆஜராகினர். அப்போது, நீதிபதிகள் முன்பு பாபா ராம்தேவ் மற்றும் பாலகிருஷ்ணா ஆகியோர் நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரினர்.
மன்னிப்பை எழுத்துப்பூர்வமாக ஏன் தாக்கல் செய்யவில்லை எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், நீங்கள் செய்திருப்பது "மிகப்பெரிய நீதிமன்ற அவமதிப்பு" செயல் என்றுக் கூறி, பாபா ராம்தேவின் மன்னிப்பை ஏற்க உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மறுப்புத் தெரிவித்தனர்.
நீதிமன்றத்தின் உத்தரவுகளையும் மீறிவிட்டு, தற்போது வந்து "மன்னிப்பு" என்ற பெயரில் எதையாவது எழுதி கொடுத்துவிட்டு தப்பித்து விடலாம் என நினைக்காதீர்கள் என பாபா ராம்தேவ் தரப்புக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது.
மேலும் படிக்க - யோகாவை மதிக்காததால் காங்கிரஸ் தோற்றது -பாபா ராம்தேவ்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ