யோகி ஆதித்யநாத் UP வெற்றியை ஊடகங்களில் பகிர்வு!
உள்ளாச்சி தேர்தலில் யோகி ஆதித்யநாத் இன்று வெற்றி பெற்றதை தொடர்ந்து ஊடகங்களில் உரையாற்றுகிறார்.
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் கடந்த 22-ம் தேதி, 24-ம் தேதி மற்றும் 29-ம் தேதி என 3 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது.
உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தலில் பிஜேபி வெற்றி பெற்றதை அடுத்து, முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் பதவியேற்றார். அவர் பதவியேற்ற பிறகு நடைபெறும் முதல் உள்ளாட்சி தேர்தல் என்பது குறிபிடத்தக்கது.
உ.பி., உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை நடைபெற்றது. இதில், மதுராவில் வார்டு எண் 56-ல் பி.ஜே.பி மற்றும் காங்கிரஸ் இருவரும் 874 வாக்குகளைப் பெற்று சமநிலையில் இருந்ததால், இறுதியில் குலுக்கல் முறையில் வெற்றி தீர்மானிக்கபட்டது. இதில் பாஜக வேட்பாளர் மீரா அகர்வால் வெற்றி பெற்றார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து தற்போது, மகிழ்ச்சியடைந்த யோகி ஆதித்யநாத் உள்ளாச்சி தேர்தலின் வெற்றி குறித்து ஊடகங்களில் உரையாற்றுகிறார்.