உ.பி., முதல்வராக யோகி ஆதித்யநாத் பதவியேற்றார்!!
உத்தரபிரதேச முதல் மந்திரியாக மடாதிபதி யோகி ஆதித்யநாத் தேர்வு செய்யப்பட்டார். லக்னோவில் இன்று அவர் பதவி ஏற்றார்.
நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த உத்தரபிரதேச மாநில சட்டசபை தேர்தலில் பாஜக அபார வெற்றி பெற்று, ஆட்சியைக் கைப்பற்றியது.
லக்னோ: உ.பி., மாநிலத்தின் 21 வது முதல்வராக யோகி ஆதித்யநாத் இன்று ( 19 ம்தேதி )மதியம் பதவியேற்று கொண்டார். அவருக்கு கவர்னர் ராம்நாயக் அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். கே.பி., மவுரியா, தினேஷ்சர்மா ஆகிய இருவருக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டுள்ளது.சமீபத்திய தேர்தலில் பா.ஜ., 325 தொகுதிகளை பெற்று தனிப்பெரும் மெஜாரிட்டியுடன் ஆட்சிகட்டிலில் அமர்கிறது. யோகியின் அமைச்சரவையில் 49 பேருக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், மாநில பாஜக தலைவர் கேசவ் பிரசாத் மவுரியா, கோரக்பூர் எம்.பி., யோகி ஆதித்யநாத், மத்திய தொலைதொடர்புதுறை மந்திரி மனோஜ் சின்கா உள்ளிட்ட பலரது பெயர்கள் பலமாக அடிபட்டன. கட்சித் தலைமை, உத்தரபிரதேச முன்னணி தலைவர்களுடன் ஒரு வார காலத்துக்கு மேலாக தொடர்ந்து ஆலோசனை நடத்தி வந்தது.
இந்நிலையில் முதல்வரை தேர்ந்தெடுப்பதற்காக பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம், லக்னோவில் நேற்று மாலை 5.30 மணிக்கு தொடங்கியது.
இதில் மேலிட பார்வையாளர்களாக மத்திய மந்திரிகள் வெங்கையா நாயுடுவும், பாஜக பொதுச் செயலாளர் பூபேந்திர யாதவும் கலந்து கொண்டனர். அவர்களுடன் மாநில பாஜக பொறுப்பாளர் ஓம் மாத்தூர், மாநில பாஜக தலைவர் கேசவ் பிரசாத் மவுரியா, தேசிய இணை அமைப்புச்செயலாளர் சிவ பிரகாஷ், மாநில பொதுச்செயலாளர் சுனில் பன்சால் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
இதில் சட்டசபை பாஜக தலைவராக 44 வயதான மடாதிபதி யோகி ஆதித்யநாத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது பெயரை மாநில பாஜக தலைவர் கேசவ் பிரசாத் மவுரியா முன்மொழிந்தார். அவர் உத்தரபிரதேசத்தின் 32-வது முதல்வர் ஆனார்.
முதல்வராக யோகி ஆதித்யநாத் தேர்வு செய்யப்பட்டுள்ளதை கட்சியின் மூத்த தலைவர்கள், கவர்னர் ராம்நாயக்கை சந்தித்து தெரிவித்து, ஆட்சி அமைக்க உரிமை கோரினர். அதைத் தொடர்ந்து யோகி ஆதித்யநாத்தை ஆட்சி அமைக் குமாறு கவர்னர் ராம்நாயக் முறைப்படி அழைப்பு விடுத்தார்.
லக்னோவில் உள்ள கன்ஷிராம் ஸ்மிரிதி உப்வானில் இன்று உத்தரபிரதேசத்தின் முதல் மந்திரியாக யோகி ஆதித்யநாத் பதவி ஏற்றார். அவருக்கும், துணை முதல் மந்திரிகள் கேசவ் பிரசாத் மவுரியா, தினேஷ் சர்மா மற்றும் மந்திரிகளுக்கும் கவர்னர் ராம்நாயக் பதவிப்பிரமாணமும், ரகசியகாப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
லக்னோவில் திறந்த வெளி மைதானத்தில் நடந்த விழாவில் பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித்ஷா, பாஜக மூத்த தலைவரான அத்வானி, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத்சிங், வெங்கையா நாயுடு, உமாபாரதி உள்ளிட்ட பலர், மாஜி முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், முலாயம்சிங்யாதவ், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, பாஜக ஆளும் மாநில முதல்வர்கள் பொ பாஜக தொண்டர்கள், பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர்.
யோகி ஆதித்யாநாத் தலைமையிலான அமைச்சரவையில் 49 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். பெண்கள் 6 பேர் அடங்குவர். பதவியேற்பு விழா நடக்கும் முன்னதாக விழா பந்தலுக்கு ஆதித்யாநாத் சென்று பார்வையிட்டார். தொடர்ந்து சில யோசனைகளை வழங்கினார்.