அயோத்தி நகர் சரயு நதிக்கரையில் 3,01,152 அகல் விளக்குகளை ஏற்றி கின்னஸ் சாதனை படைத்த உத்தரப்பிரதேசம்...! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள அயோத்தியில் கடந்த 4 ஆம் தேதி முதல் 6 ஆம் தேதி வரை மூன்று நாட்கள் தீபஉற்சவம் நடைபெற்றது. இந்நிலையில், இறுதி நாளான நேற்றிரவு அயோத்தி நகர் சரயு நதிக்கரையில் 3,01,152 அகல் விளக்குகளை ஏற்றி மகிழ்ச்சியுடன் தீப ஒளி கொண்டாட்டங்கள் நடைபெற்றது.
 
இந்நிலையில், இந்த நிகழ்ச்சி கின்னஸ் சாதனையாகவும் மாறியுள்ளது. இதை காண வந்திருந்த உலக சாதனை புத்தகமான கின்னஸ் நிறுவனத்தின் பிரதிநிதிகள் இந்த சாதனையை அங்கீகரிக்கும் சான்றிதழை உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யாநாத்திடம் வழங்கியுள்ளனர். 


இந்த நிகழ்ச்சியில், உத்தரப்பிரதேசம் மாநில முதலமைச்சர் ஆதித்யாநாத், ஆளுநர், துணை முதலமைச்சர், இந்தியா வந்துள்ள தென்கொரியா அதிபரின் மனைவி உள்ளிட்டோரும்,  பல்லாயிரக்கணக்கான மக்களும் இதில் பங்கேற்றனர். தீபங்களின் ஒளிவெள்ளத்தில் அயோத்தியா நகரம் ஜொலிக்கும் இந்த தீபோத்சவம் காட்சியை யாவரும் கண்டு ரசித்தனர்.