யோகி ஆதித்யநாத் சென்ற ஹெலிகாப்டர் அவசரமாகத் தரையிறக்கம்
உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் சென்ற ஹெலிகாப்டரின் மீது பறவை மோதியதால் அவசரம் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.
2 நாள் பயணமாக வாரணாசி வந்திருந்த உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்ய நாத், காசி விஸ்வநாத் கோயிலில் ஆய்வுக்கூட்டம் நடத்தினார். இதனைத் தொடர்ந்து அங்கிருந்து லக்னோ செல்ல ஹெலிகாப்டரில் புறப்பட்டார்.
புறப்பட்ட உடனேயே பறவை மோதியதைத் தொடர்ந்து ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டது. வாரணாசியில் இருந்து லக்னோவுக்கு புறப்பட்ட முதலமைச்சரின் ஹெலிகாப்டர் மீது ஒரு பறவை மோதியதால், அவசரமாகத் தரையிறங்க வேண்டியிருந்ததாக மாவட்ட ஆட்சியர் கவுஷல்ராஜ் சர்மா கூறினார்.
மேலும் படிக்க | அசாம் வெள்ளம்: சுமார் 45 லட்சம் பேர் பாதிப்பு, நெடுஞ்சாலைகளில் மக்கள் தஞ்சம்
இதனைத் தொடர்ந்து ஹெலிகாப்டர் வாரணாசியின் போலீஸ் லைன்ஸ் மைதானத்தில் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டது. இச்சம்பவத்துக்குப் பிறகு சர்க்யூட் ஹவுஸ் திரும்பிய முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், பின்னர் அரசு விமானம் மூலம் லக்னோவுக்குப் பயணம் செய்தார். இச்சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் படிக்க | G7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி ஜெர்மன் பயணம்
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR