பாகிஸ்தானின் 20 Youtube சேனல்கள், இணையதளத்தை முடக்கிய மத்திய அரசு
பாகிஸ்தானில் இருந்து இந்திய இறையாண்மைக்கு எதிராகவும், இந்தியாவில் குழப்பங்களை ஏற்படுத்தும் நோக்கிலும் செயல்பட்ட 20 யூடியூப் சேனல்கள் மற்றும் 2 இணையதளங்களை மத்திய அரசு முடக்கியுள்ளது.
பாகிஸ்தானில் இருந்து இந்திய இறையாண்மைக்கு எதிராகவும், இந்தியாவில் குழப்பங்களை ஏற்படுத்தும் நோக்கிலும் செயல்பட்ட 20 யூடியூப் சேனல்கள் மற்றும் 2 இணையதளங்களை மத்திய அரசு முடக்கியுள்ளது. காஷ்மீர் விவகாரம், விவசாயிகள் போராட்டம், ராமர் கோவில், உள்பட இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்கள் குறித்து பொய்யான தகவல்களை தொடர்ந்து பதிவிட்டு வந்த சேனல்களை முடக்கப்பட்டுள்ளதாக மத்திய தகவல் ஒளிபரப்பு துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் இருந்து செயல்பட்ட இந்த யூட்யூப் சேனலகள்,, ‘காஷ்மீரில் தோல்வியை பிரதமர் மோடி ஒப்புக்கொண்டார்; சட்டப்பிரிவு 370 மீட்டெடுக்கப்பட்டது', 'காபூலில் இருந்து இந்தியாவுக்கு சென்ற தலிபான் ராணுவம்', 'காஷ்மீருக்கு துருக்கி அதிபர் எர்டோகன் 35,000 படைகளை அனுப்புகிறார்', 'துருக்கி ராணுவம் பழிவாங்க அயோத்தி ராமர் கோயிலுக்குள் நுழைந்தது' போன்ற தலைப்புகளில் பொய்யான செய்திகளை வெளியிட்டு இந்தியாவில் அமைதியின்மையை விதைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
IT விதிகளின், 17வது பிரிவின் கீழ், தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் , நாட்டின் இறையாண்மையை பாதிக்கும் வகையிலான, தேச விரோத கருத்துக்களை பரப்புவதாக கருதப்படும் உள்ளடக்கத்தைத் தடை செய்யலாம்.
ALSO READ | Aadhaar - Voter ID Link: தேர்தல் சீர்திருத்த மசோதா மாநிலங்கள் அவையில் நிறைவேறியது
நாட்டிற்கு எதிராக பாகிஸ்தான் தரப்பில் இருந்து மேற்கொள்ளப்படும் சதி திட்டங்களை தடுக்கவே அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது என்று கூறிய அனுராக் தாக்கூர் ஊடகங்கள் குறித்து ராகுல் காந்தி கூறியது வெட்கக்கேடானது என்றும் காங்கிரஸ் தலைவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கூறினார். பஞ்சாப்பில் தங்க கோவிலில் நடந்த படுகொலை குறித்து கேட்கையில், ஊடகங்கள் மத்திய அரசுக்கு அடிபணிந்து நடப்பதை நிறுத்த வேண்டும் என கூறினார்.
ALSO READ | மத்திய அரசின் சார்தாம் சாலை திட்டத்துக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR