ஒரு கிலோ பிளாஸ்டிக்கு பதிலாக, ஒரு கிலோ அரிசி: எம்.எல்.ஏ. ரோஜா
எம்.எல்.ஏ ரோஜா, ஒரு புதிய திட்டத்தை செயல் படுத்தி உள்ளார். அதாவது ஒரு கிலோ பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக, மக்களுக்கு ஒரு கிலோ அரிச வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
சித்தூர்: நாட்டில் பிளாஸ்டிக் பொருட்களை (Plastic Free) ஒலிக்கும் முயற்சி மெது மெதுவாக வேம் எடுக்கிறது என்பதை காட்டுகிறது. அதற்கான சமீபத்திய உதாரணத்தில், ஆந்திராவில் ஆளும் யுவஜன, ஸ்ரமிஜ, ருது காங்கிரஸ் கட்சியை (YSR Congress Party) சேர்ந்த ஒரு சட்டமன்ற பெண் உறுப்பினர், தனது தொகுதி மக்களிடம் ஒரு கிலோ பிளாஸ்டிக்கிற்கு பதிலாக ஒரு கிலோ அரிசியை வழங்குவதாக அறிவித்துள்ளார். அந்த சட்டமன்ற உறுப்பினர் வேறு யாரும் இல்லை. தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் முதல் விஜய், அஜித் என முக்கிய நடிகர்களுடன் நடித்த நடிகை ரோஜா (Actress Roja) தான். அவர் தற்போது ஆந்திர மாநிலத்தின் ஆளும் கட்சியாக இருக்கும் ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் (MLA) ஆவார். அரசியலில் நுழைந்து தற்போது எம்.எல்.ஏ-வாக உள்ளார்.
பிளாஸ்டிக் (Ban Plastic) பொருட்களின் முக்கியத்துவத்தை உணர்ந்த எம்.எல்.ஏ ரோஜா, ஒரு புதிய திட்டத்தை செயல் படுத்தி உள்ளார். அதாவது ஒரு கிலோ பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக, மக்களுக்கு ஒரு கிலோ அரிச வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இந்த திட்டம் ஒரு மாதத்திற்கு செயல்படுத்தப்படும் என்று ரோஜா தெரிவித்துள்ளார். இவரின் வித்தியாசமான இந்த திட்டம் மக்களை கவர்ந்துள்ளது.
மக்கள் முன் உரையாற்றிக் கொண்டு இருந்த ரோஜா, பிளாஸ்டிக் கழிவுகளால் நிரப்பப்பட்ட இருந்த ஒரு சாக்கடையை சுட்டிக்காட்டி இதுபோன்ற பிளாஸ்டிக் கழிவுகளை ஒவ்வொரு வார்டு மற்றும் ஒவ்வொரு பஞ்சாயத்திலிருந்தும் சுத்தம் செய்ய வேண்டும். அந்த பிளாஸ்டிக்கை என்னிடம் கொண்டு வந்தால், ஒரு கிலோ பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக ஒரு கிலோ அரிசி கொடுப்பேன் எனக் கூறியுள்ளார்.
நடிகையாக வலம் வந்து, [பின் கடுமையான போராட்டத்திற்கு பிறகு அரசியல்வாதியான ஆர்.கே.ரோஜா மேலும் கூறுகையில், "எனது பிறந்த நாள் நவம்பர் 17 ஆம் தேதி வருகிறது. அதேபோல நமது முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியின் பிறந்த நாள் டிசம்பர் 21 ஆம் தேதி வருகிறது. எனது பிறந்த நாள் முதல் முதல்வரின் பிறந்த நாள் வரை சுத்தமான மற்றும் ஆரோக்கியமான எதிர்காலத்திற்காக, "நோ பிளாஸ்டிக் - புதிய நகரம்" என்ற பிரச்சாரம் அமல் படுத்தப்படும் எனக் கூறினார்.
திரைப்பட உலகில் இருந்து அரசியலுக்கு வரும் ரோஜா, ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தில் உள்ள நாக்ரி விதான் சபையில் இருந்து இரண்டாவது முறையாக எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது அனைவரும் தெரியும். சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் கட்சியின் குற்றச்சாட்டுகளுக்கு ஆவேசமான பதிலடி தந்த சம்பவத்தால், அவர் அதிகமாக வெளிச்சத்திற்கு வந்தார். ஏற்கனவே அவர் நடிகையாக அறியப்பட்டாலும், தற்போது அவர் ஆந்திர அரசியலில் முக்கிய தலைவர்களில் ஒருவராக வலம் வருகிறார்.
நடிகை ரோஜா கடந்த 2000 ஆம் ஆண்டு தெலுங்கு தேசம் கட்சியில் தன்னை இணைந்துகே கொண்டார். பிறகு கடந்த 2009 ஆம் ஆண்டு தெலுங்கு தேசம் சார்பில் சட்டசபை தேர்தலில் போட்டியிட்டார். ஆனால் தேர்தலில் அவருக்கு தோல்வி தான் கிடைத்தது. இதற்கு முக்கிய காரணம், தெலுங்கு தேசம் கட்சியில் அவருக்கு சரியான ஆதரவு கிடைக்கவில்லை. மேலும் அவர் வளர்வதை கட்சியில் யாரும் விரும்பவில்லை. இதனால் தெலுங்கு தேசம் கட்சியில் இருந்து விலகிய அவர், ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அங்கிருந்து அவர் அரசியலில் பிரபலமாக தொடங்கினார். அந்த கட்சி சார்பாக 2014 ஆம் ஆண்டு நகரி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு மாபெரும் வெற்றியை பெற்றார். மீண்டும் இந்த வருடம் (2019) நடைபெற்ற சட்டசபை தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றார்.