ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க கோரி YSRC கட்சியின் சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த 2014-ல் ஒருங்கிணைந்த ஆந்திரப் பிரதேசத்திலிருந்து தெலங்கானா மாநிலம் பிரிக்கப்பட்டதை அடுத்து, பிரிவினையின்போது ஆந்திராவில் எழுந்த எதிர்ப்பை சமாளிக்க அம்மாநிலத்திற்கு பல்வேறு சலுகைகள் அளிப்பதாக மத்திய அரசால் உறுதி அளிக்கப்பட்டது. 


அதன்படி ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க வேண்டும் என ஆளும் தெலுங்கு தேசம் உள்பட அனைத்து கட்சிகளும் வலியுறுத்தின. ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்த்து வழங்கக் கோரி ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அவர்கள் மத்திய அரசுக்கு பலமுறை நெருக்கடி கொடுத்து வந்தார், அதை மத்திய அரசு ஏற்காததால் பாஜக கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் கட்சி விலகியது. 


இந்நிலையில் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க கோரியும் இதற்காக தெலுங்கு தேசம் கட்சி MP-க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் YSR காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி இன்று முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தார். இந்த போராட்டத்திற்கு பல்வேறு அமைப்புகளும் ஆதரவு அளித்துள்ளன.


எனினும் இந்தப் போராட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்கவில்லை. இதுகுறித்து மாநில காங்கிரஸ் தலைவர் ரகுவீரா ரெட்டி தெரிவிக்கையில்.. “சிறப்பு அந்தஸ்து உட்பட மாநிலப் பிரிவினை மசோதாவில் குறிப்பிடப்பட்ட அனைத்து சலுகைகளையும் காங்கிரஸ் ஆதரிக்கிறது. மத்தியில் அடுத்து காங்கிரஸ் ஆட்சி அமைந்தவுடன் இந்தக் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். எனவே YSR காங்கிரஸின் இந்தப் போராட்டம் தேவையற்றது. இதில் காங்கிரஸ் பங்கேற்காது” என குறிப்பிட்டுள்ளார்.