செய்தி உலகில்  Zee Hindustan-ன் புதிய புரட்சி -  புதிய சோதனைகள் மற்றும் புதிய தொடக்கங்கள் தேசிய அங்கீகாரத்தைப் பெற்றுள்ளன…


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உலகின் முதல் நெறியாளர் அற்ற மற்றும் பன்மொழி செய்தி சேனலான Zee Hindustan-க்கு சிறந்த செய்தி தொலைக்காட்சி என்ற பட்டத்தை இந்திய செய்தித்தாள் சங்கமான NAI வழங்கியுள்ளது. 


இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கில் ஒளிபரப்பாகும் Zee Hindustan என்ற செய்தி தொலைக்காட்சி இன்று தேசத்தின் குரலாக மாறியுள்ளது…. இந்த சிறப்பு விருதை நாட்டின் தலைநகரான டெல்லியில் டிசம்பர் 15 ஆம் தேதி நடைபெற்ற சிறப்பு கௌரவ விழாவில் ஜீ இந்துஸ்தான் செய்திப்பிரிவுத் தலைவர் ரமேஷ் சந்திரா பெற்றுக்கொண்டார்.


Zee Hindustan-ன் புரொடியூசர் மாதுரி கலால், நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து மக்களின் குரலையும் அவர்களது தேர்தல் சிந்தனையையும் நாட்டு மக்கள் முன் கொண்டு வந்ததற்காக, இந்த நிகழ்வில் சிறந்த ஆங்க்கர்- புரொடியூசர் விருது வழங்கப்பட்டது.


இதில் பங்கேற்ற பிரபல ஊடக ஜாம்பவான்கள் அனைவரும், நாட்டின் செய்திகளை நாட்டின் மூலை முடுக்கிலும் வசிக்கும் மக்களுக்கு அவர்களது சொந்த மொழியில் பரப்பியதற்காக Zee Hindustan-க்கு பாராட்டுகளை தெரிவித்தனர். அப்போது பேசிய Zee Hindustan தலைமை நிர்வாக அதிகாரியும் தலைமை ஆசிரியருமான புருஷோத்தம் வைஷ்ணவ், டிவி செய்திகளில் Zee Hindustan-ன் நெறியாளரற்ற மற்றும் பன்மொழி வடிவம் வெகுஜனங்களுடன் வேகமாக இணைகிறது என்று குறிப்பிட்டார்.