ஒடிசாவின் மேயுபன்ஜில் இந்திய விமானப்படை விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஒடிசா மாநிலம் மேயுபன்ஜி பகுதியில், இந்திய விமானப்படை விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த விபத்தில் இருந்து விமானி மற்றும் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார் எனவும், பின்னர் அவர் சிகிச்சைக்காக ஜார்கண்ட் தலைமை மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.


ஒடிசா-ஜார்கண்ட் எல்லைப் பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.


விபத்திற்கான காரணம் இதுவரை மர்மமகாவே உள்ளது. இதுகுறித்து இந்திய விமானப்ப படை தரப்பில் தெரிவிக்கையில்.... படைவீரர்களுக்கு வழக்கமாக வழங்கப்படும் பயிற்சிகளின் அடிப்படையில் இன்று நடைப்பெற்ற பயிற்சி ஓட்டத்தின் போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்திற்கான காரணம் குறித்து ஆராயப்பட்டு வருகிறது. என தெரிவித்துள்ளனர்.



மேலும் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைப்பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!


(மேலும் விவரங்கள் காத்திருக்கிறது