கடந்த 10 வருடமாக நடந்து வரும் ஐ.பி.எல் தொடரின் 11_வது சீசன் இன்று கோலாகலமாக மும்பை வான்கடே ஸ்டேடியம் தொடங்குகிறது. பலத்த வரவேற்பை பெற்றுள்ள ஐ.பி.எல் தொடரின், இந்த ஆண்டுக்கான முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் மோதுகின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்ற IPL தொடரில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இரண்டு ஆண்டு இடைகால தடை விதிக்கப்பட்டது. கடந்த இரண்டு சீசனில் விளையாடாத சென்னை அணி இந்த முறை களமிறங்குகின்றன. இதனால் தமிழ்நாட்டு ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.


வீடியோ: ஐ.பி.எல் 11_வது சீசன் பாடல் 5 மொழிகளில் வெளியானது


ஐ.பி.எல் 11_வது சீசனில் மொத்தம் எட்டு அணிகளான நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், கிங்ஸ்லெவன் பஞ்சாப், ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு, டெல்லி டேர்டெவில்ஸ், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ்  விளையாடுகின்றன. 


லீக் போட்டியில் ஒவ்வொரு அணியும் மற்றொரு அணியுடன் தலா 2 முறை மோத வேண்டும். முதல் நான்கு  இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும். முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகளுக்கிடையே நடக்கும் போட்டியில் வெல்லும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெரும். தோற்கும் அணி, மூன்றாவது மற்றும் நான்காவது இடங்களை பிடிக்கும் அணிகளுக்கிடையே நடக்கும் போட்டியில் வெற்றி பெரும் அணியுடன் மோதும். இதில் வெற்றி பெரும் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெரும். இறுதி போட்டியில் வெல்லும் அணிக்கு கோப்பை கொடுக்கப்படும். 


ஐபிஎல் 2018: சென்னை விளையாடும் போட்டிக்கான டிக்கெட் விலை, நாள் அறிவிப்பு


இதுவரை ஐ.பி.எல். தொடரில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் நேருக்கு நேர் 22 முறை மோதியுள்ளன. அதில் மும்பை இந்தியன்ஸ் 12 முறையும், சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி 10 முறையும் வெற்றி பெற்றுள்ளது.


நடப்பு சாம்பினான மும்பை இந்தியன்ஸ் அணி இருவரை மூன்று முறை கோப்பையை வென்றுள்ளது. 4-வது முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் மும்பை இந்தியன்ஸ் அணி இன்று களம் இறங்குவார்கள் என எதிர்பார்ப்படுகிறது. இரண்டு முறை கோப்பையை வென்றுள்ள சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி மூன்றாவது முறையாக கோப்பையை வெல்ல வேண்டும் என எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.


இந்த ஐ.பி.எல். சீசனில் முதல் முறையாக டி.ஆா்.எஸ். முறை பின்பற்றப்படுகிறது. ஐ.பி.எல் 11_வது சீசனில் முதல் போட்டியும், இறுதி போட்டியும் மும்பையில் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


IPL 2018: ஐ.பி.எல்-க்கு தடை கேட்டு வழக்கு!


ஐ.பி.எல். 11_வது சீசனில் கோப்பை வெல்லும் அணிக்கு ரூ.26 கோடியும், இரண்டாவது இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.13 கோடியும் வழங்கப்படும்.


இன்று போட்டி ஆரம்பிக்கும் முன்பு, இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல் தொடக்க விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில் ஷ்ரத்தா கபூர், பரினீதி சோப்ரா, திஷா பதானி, எமி ஜாக்சன், ரிதேஷ் தேஷ்முக், வருண் தவான், ஜாக்குலின் பெர்னாண்டஸ், ஹிருத்திக் ரோஷண் என பல நடிகர் - நடிகைகள் கலந்து கொள்கின்றனர். மேலும் இவர்களோடு பிரபுதேவா மற்றும் தமன்னாவும் இணைந்து நடனமாட இருகின்றனர்.