தமிழகத்தில் அதிகமாக புழக்கத்தில் இருந்துவரும் போலி முத்திரைகள் பயன்பாட்டை ஒழிப்பதற்காக தமிழக முதலவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் இ-ஸ்டாம்பிங் முறையை அறிமுகபடுத்தியுளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இது தொடர்பாக நடைபெற்ற நிகழ்சியில், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, இத்திட்டத்தை துவங்கிவைத்தார். மேலும், இ-ஸ்டாம்பிங் முறையில் கட்டணம் செலுத்தும் கவுண்டர்களையும் துவங்கிவைத்தார்.  


இதை தொடர்ந்து இந்நிகழ்ச்சியில் பேசிய எடபடி பழனிசாமி.....!


புழக்கத்தில் இருந்துவரும் போலி முத்திரைகள் பயன்பாட்டை ஒழிப்பதற்கான வழிமுறை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தற்போது, சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரைக்கிளையில் தொடங்கப்பட்டுள்ள இ-ஸ்டாம்பிங் முறை, அடுத்தகட்டமாக அனைத்து மாவட்ட முதன்மை நீதிமன்றங்களிலும் செயல்படுத்த உள்ளதாகவும் தெரிவித்தார்.  


தமிழகம் இ-ஸ்டாம்பிங் திட்டத்தை அறிமுகபடுத்தும் எட்டாவது மாநிலம் ஆகும். இந்த முறை மூலம் வழக்குக்கான கட்டணத்தை மின்னணு முறையில் பொதுமக்கள் செலுத்தலாம். இதுவரை வழக்கு தொடர்வதற்கான கட்டணம், ஸ்டாம்ப், பத்திரம் மூலமாகவே பெறப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது இ-ஸ்டாம்பிங் முறைமூலம் கட்டணம் செலுத்துவது மேலும் எளிமை படுத்தும் முறையில் இந்த முறை அறிமுகபடுத்தபட்டுள்ளது.