IPL_2018: சென்னையை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது கொல்கத்தா!
ஐபிஎல் தொடரின் 33-வது போட்டியில் கொல்கத்தா மற்றும் சென்னை அணிகள் நேற்று மோதின. இதில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றது.
ஐபிஎல் தொடரின் 33-வது போட்டியில் கொல்கத்தா மற்றும் சென்னை அணிகள் கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நேற்று மோதின. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தது.
சென்னை அணி:-
அதன்படி முதலில் பேட்டிங் செய்த சென்னை 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் சேர்த்தது. டோனி 25 பந்தில் 4 சிக்சர், ஒரு பவுண்டரியுடன் 43 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் நின்றார். வாட்சன் 36 ரன்களும், ரெய்னா 31 ரன்களும், டு பிளஸ்சிஸ் 27 ரன்களும் எடுத்தனர்.
கொல்கத்தா அணி:-
பின்னர் 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்கியது. கொல்கத்தா அணி 17.5 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் கொல்கத்தா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தியது.
இந்த வெற்றி மூலம் கொல்கத்தா அணி மூன்றாவது இடத்திற்கு முன்னேறி உள்ளது. அதேவேளையில் சென்னை அணி இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டு உள்ளது.