வரும் IPL 2018 தொடரில் கொல்கத்தா அணியின் மிட்செல் ஸ்டார்க் காயம் காரணமாக விலகியதை அடுத்தி அவருக்கு பதிலாக டாம் குர்ரான் விளையாடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

IPL-2018 கிரிக்கெட் போட்டிகளின் 11-வது சீசன் ஏப்ரல் 7-ம் தேதி தொடங்கி மே மாதம் 27-ம் தேதி வரை நடைபெற உள்ளது. சூதாட்ட புகார் காரணமாக கடந்த இரண்டு சீசனில் விளையாடாத சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் இந்த முறை களம் காணுகின்றன. எதிர்வரும் IPL தொடருக்காக அனைத்து அணிகளும் கடும் பயிற்சியில் ஈடப்பட்டு வரிகின்றனர்.


இந்நிலையில், ஐ.பி.எல் போட்டிகளுக்கு தடை கேட்டு சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு பதிவு செய்துள்ளனர். 2013-ம் ஆண்டு நடந்த ஐ.பி.எல் போட்டிகளில் சூதாட்டத்தில் ஈடுபட்டவர்களை விடுவிக்க லஞ்சம் பெற்றதாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஐ.பி.எஸ் அதிகாரி சம்பத்குமார் பொது நல வழக்கு. 


ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிக்கு தடை கோரி ஐ.பி.எஸ் அதிகாரி சம்பத்குமார் வழக்கில் மத்திய அரசு, பி.சி.சி.ஐ., ஐ.பி.எல்.ஆகியவை பதிலளிக்க தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி அமர்வு உத்தரவு. சூதாட்டங்களை தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்காமல் ஐ.பி.எல் போட்டிகளை நடத்த தடை விதிக்க வேண்டும். கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு மட்டுமே தடை. வீரர்களுக்கு தண்டனை இல்லை. சூதாட்டத்தை தடுக்க விதிகள் ஏதும் இல்லை என சம்பத்குமார் தெரிவித்தார். 


இந்த சூதாட்ட வழக்கில் தாவூத் இப்ராஹிமின் சகோதரர் கூட சம்பந்தப்பட்டுள்ளார் எனவும் சம்பத்குமார் தெரிவித்துள்ளார்.