கடந்த 1௦-ம் தேதி முதல் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி மத்திய அரசுக்கு எதிராக தமிழகம் முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகள், விவசாயா அமைப்புக்கள், இயங்கங்கள், மாணவர்கள், இளைஞர்கள், வணிகர்கள், பெண்கள், தொழிலாளர்கள் என அனைத்துத் தரப்பினரும் போராட்டம் நடந்தி வருகின்றன. இதனால் தமிழகமே போராட்டக்களமாக மாறியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த நிலையில், சென்னையில் நடைபெறும் ஐபிஎல் போட்டி காரணமாக, காவிரிக்காக நடைபெற்று வரும் போராட்டம் திசை திருப்பக்கூடும் எனக்கூறி சில அரசியல் கட்சிகள் ஐபிஎல் போட்டி நடத்தக்கூடாது எனக் கோரிக்கை வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 


இதனால் போட்டி நடைபெறும் சேப்பாக்கம் பகுதியில் பல அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களை கைது செய்தும், அவர்கள் மீது தடியடி நடத்தியும் போராட்டத்தை கலைத்து வருகின்றனர். இந்தப் போராட்டத்தில் இயக்குநர்கள் பாரதிராஜா, கெளதமன், வெற்றிமாறன், கவிஞர் வைத்துமுத்து மற்றும் நாம் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் என பலர் கலந்து கொண்டனர். கடந்த நான்கு மணி நேரமாக இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது.


இந்நிலையில், இன்னும் சில மணி நேரத்தில் போராட்டம் இயல்பு நிலைக்கு திரும்பக்கூடும் என காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.


இவ்வளவு போராட்த்திற்கு மத்தியிலும் ரசிகர்கள் போட்டியைக்கான மைதானத்திற்கு வந்துள்ளனர். வழக்கமாக வரும் கூட்டத்தை காட்டிலும், இன்று நடக்கும் போட்டிக்கு சற்று குறைவான ரசிகர்களே வந்துள்ளனர்.