இன்று இரவு 8 மணிக்கு பெங்களூரில் உள்ள சின்ன சாமி மைதானத்தில் நடைபெற உள்ள சென்னை  மற்றும் பெங்களூரு ஆட்டத்தில், டாஸ் வென்ற அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பீல்டிங் தேர்வு செய்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



 



இன்று நடைபெறும் 24_வது லீக் போட்டியில் சென்னை அணியும், பெங்களூரு அணியும் மோதுகின்றன. இந்த ஆட்டம் இன்று இரவு 8 மணிக்கு பெங்களூரில் உள்ள சின்ன சாமி மைதானத்தில் நடைபெற உள்ளது.


இரண்டு வருடங்கள் கழித்து களம் இறங்கி உள்ள சென்னை அணி, இந்த சீசனில் முதல் முறையாக பெங்களூரு அணியுடன் மோதுவத்தால், இன்றைய ஆட்டம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.


படிக்க: டெல்லி அணி கேப்டன் பெருப்பில் இருந்து கம்பீர் விலகல்!


சென்னை அணியும், பெங்களூரு அணியும் 21 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதி உள்ளது. அதில் 13 ஆட்டங்களில் சென்னை அணியும், 7 ஆட்டங்களில் பெங்களூரு அணியும் வெற்றி பெற்றுள்ளது. 


பெங்களூரு சின்ன சாமி மைதானத்தை பொருத்த வரை இரு அணிகளும் ஏழு முறை மோதியுள்ளது. 7 ஆட்டங்களில் மூன்று முறை இரு அணிகளும் வெற்றியை பதிவு செய்துள்ளது. ஒரு ஆட்டம் முடிவு இல்லை.


படிக்க: வைரலாகும் "தல தோனி" தூங்கும் போட்டோ!!


ஐபிஎல் 11_வது சீசனில் இதுவரை விளையாடிய சென்னை அணி 5 ஆட்டங்களில் 4 வெற்றி பெற்று, புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. கடைசியாக நடத்த இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று சென்னை அணி உற்சாகமாக உள்ளது.


பெங்களூரு அணி 5 ஆட்டங்களில் 2-ல் வெற்றி பெற்று, புள்ளி பட்டியலில் ஆறாவது இடத்தில் உள்ளது. விராட் கோலி, டி வில்லியர்ஸ் மற்றும் குயிண்டன் டி காக் நல்ல பார்மில் உள்ளனர்.


படிக்க: இணையத்தில் வைரலாகும் #CSK வீரர்களின் குழந்தை புகைப்படங்கள்!


சென்னை அணிக்கு எதிராக விராத் கோலி 19 ஆட்டங்களில் 705 ரன்கள் அடித்துள்ளார். சராசரி 44.13 ஆகும். 6 அரைசதங்களை அடித்துள்ளார். அதேபோல பெங்களூரு எதிராக எம்.எஸ். தோனி 22 ஆட்டங்களில் 608 ரன்கள் அடித்துள்ளார். சராசரி 32.00 ஆகும். 2 அரைசதங்களை அடித்துள்ளார்.


படிக்க: Video: துப்பாக்கி சுடுதலில் ஈடுப்படும் MS டோனி!



Chennai Super Kings (From): Shane Watson, Faf du Plessis, Suresh Raina, Ambati Rayudu, MS Dhoni(w/c), Sam Billings, Dwayne Bravo, Ravindra Jadeja, Deepak Chahar, Karn Sharma, Shardul Thakur, Imran Tahir, Harbhajan Singh, KM Asif, Kanishk Seth, Lungi Ngidi, Dhruv Shorey, Murali Vijay, Mark Wood, Kshitiz Sharma, Monu Kumar, Chaitanya Bishnoi, N Jagadeesan, David Willey


Royal Challengers Bangalore (From): Quinton de Kock(w), Manan Vohra, Virat Kohli(c), AB de Villiers, Corey Anderson, Mandeep Singh, Washington Sundar, Chris Woakes, Umesh Yadav, Mohammed Siraj, Yuzvendra Chahal, Sarfaraz Khan, Brendon McCullum, Colin de Grandhomme, Moeen Ali, Kulwant Khejroliya, Aniket Choudhary, Navdeep Saini, Murugan Ashwin, Pawan Negi, Parthiv Patel, Aniruddha Joshi, Pavan Deshpande, Tim Southee