ரிஷாப் பந்த் அதிரடி ஆட்டத்தால் குளிர்ந்த டெல்லி அணி!
IPL 2018 தொடரின் 42-வது போட்டியில் டெல்லி அணி 187 ரன்கள் குவித்துள்ளது!
IPL 2018 தொடரின் 42-வது போட்டியில் டெல்லி அணி 187 ரன்கள் குவித்துள்ளது!
IPL 2018 தொடரின் போட்டிகள் தற்போது விருவிருப்பாக நடைப்பெற்று வருகிறது. இத்தொடரின் போட்டிகள் இந்தியா முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் நடைப்பெற்று வருகிறது.
இத்தொடரின் 42-வது போட்டியில் ஐதராபாத் மற்றும் டெல்லி அணிகள் தற்போது விளையாடி வருகின்றன. டெல்லி பெரோஸ் ஷா மைதானத்தில் நடைப்பெற்று வரும் இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட்டிங் தேர்வு விளையாடியது.
தொடக்க வீரர்களாக களமிறங்கிய பிரத்வி ஷா மற்றும் ஜான்ஷன் ராய் சொற்ப ரன்களில் வெளியேற, ரிஷாப் பந்த் அதிரடியான ஆட்டத்தினை வெளிப்படுத்தி 63 பந்துகளில் 128 குவித்தார். இதனால் டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் குவித்துள்ளது. ஐதராபாத் அணி தரப்பில் ஷபிக் உள் ஹாசன் 2 விக்கெட்டுகளை குவித்தார்.
இதனையடுத்து 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் அணி களமிறங்கவுள்ளது.
இதற்கு முன்னதாக இவ்விரு அணிகளும் கடந்த மே 5-ஆம் நாள் நேருக்கு நேர் மோதின. இப்போட்டியில் டெல்லி அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது.
புள்ளிப் பட்டியலை பொருத்தவரையில் ஐதராபாத் அணி 10 போட்டிகளில் விளையாடி 8 வெற்றி மற்றும் 2 தோல்விகளை பெற்று 16 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. டெல்லி அணி 10 போட்டிகளில் வெறும் 3 வெற்றிகளை மட்டுமே பெற்று 6 புள்ளிகளுடன் எட்டாம் இடத்தில் உள்ளது.