கடந்த 7-ம் தேதி தொடங்கிய ஐ.பி.எல் தொடரின் 11_வது சீசனின் இன்று நடைபெறும் 7_வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டம் இன்று இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. இந்த போட்டி ஐதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெறுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த தொடரில் இரண்டு அணிகளும் விளையாடும் இரண்டாவது ஆட்டம் ஆகும். சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி தனது முதல் ஆட்டத்தில் 9 விக்கெட் வித்தியாசத்தில் இரண்டு வருடம் கழித்து களம் இறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வென்றது. ஆனால் மும்பை இந்தியன்ஸ் அணி மும்பையில் நடைபெற்ற தனது முதல் ஆட்டத்தில், இரண்டு வருடம் கழித்து களம் இறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது.


எனவே இன்றைய ஆட்டத்தில் வெற்றியை பதிவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும், வெற்றியை தொடர வேண்டும் என்ற நோக்கத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் விளையாட வேண்டிய கட்டாயத்தில் உள்ளதால், இன்றைய ஆட்டம் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 


டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி முதலில் பீல்டிங்கை தேர்வு செய்துள்ளது. இன்னும் சற்று நேரத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங் செய்ய உள்ளது.


 



 


(Mumbai Indians (Playing XI): Rohit Sharma(c), Evin Lewis, Ishan Kishan(w), Suryakumar Yadav, Krunal Pandya, Kieron Pollard, Ben Cutting, Mayank Markande, Pradeep Sangwan, Mustafizur Rahman, Jasprit Bumrah.


Sunrisers Hyderabad (Playing XI): Wriddhiman Saha(w), Shikhar Dhawan, Kane Williamson(c), Manish Pandey, Deepak Hooda, Yusuf Pathan, Shakib Al Hasan, Rashid Khan, Billy Stanlake, Siddarth Kaul, Sandeep Sharma)