ஐ.பி.எல் டி-20 கிரிக்கெட் நேற்று நடைபெற்ற போட்டியில் பெங்களூர் அணியை வீழ்த்தி ஹைதராபாத் அணி வெற்றியை நிலைநாட்டியது! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஐ.பி.எல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் 11-வது சீசன் நடந்து வருகிறது. ஐ.பி.எல்-ன் 39-வது லீக் ஆட்டம் நேற்று (மே 07) இரவு 8 மணியளவில் நடைபெற்ற போட்டியில் இராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதினர். 


ஐபிஎல் தொடரில் பெங்களூர், ஹைதராபாத் அணிகள் மோதும் போட்டியில் 5 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரை வீழ்த்தி ஹைதராபாத் வெற்றி பெற்றுள்ளது. ஐபிஎல் தொடர் இப்போது மிகவும் பரபரப்பாக சென்று கொண்டுள்ளது. புள்ளி பட்டியலில் ஹைதராபாத் அணி 7 வெற்றிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. 3 வெற்றிகளுடன் பெங்களூர் அணிக்கும் 3 வெற்றிகளுடன் 6வது இடத்தில் உள்ளது. 


பெங்களூர் அணி நேற்று எப்படி வெற்றி வெற்றி பெற்றாலும் பிளே ஆப் போட்டிக்கு தகுதி பெறுவது கஷ்டம் என்ற நிலையில்தான் போட்டி தொடங்கியது. இந்த நிலையில் அந்த அணி மிகவும் வலிமையான ஹைதராபாத் அணியை எதிர் கொண்டது. ஹைதராபாத் இன்னும் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெறவேண்டும். இந்த போட்டியில் பெங்களூர் டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்தது.


இரண்டு அணிகளிலும் எந்த விதமான மாற்றமும் செய்யப்படவில்லை. முதலில் இறங்கிய ஹைதராபாத், 20 ஓவரில் ஆல் அவுட்டாகி 146 ரன்கள் மட்டுமே எடு்த்தது. கேன் வில்லியம்சன் அதிகமாக 56 ரன்கள் எடுத்திருந்தார். 


அதன்பின் இறங்கிய பெங்களூர் அதிரடியாக ஆடியது. கோஹ்லி 39 ரன்கள் எடுத்தார். ஆனாலும் அந்த அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழந்து 141 ரன்கள் மட்டுமே எடு்த்தது. இதனால் பெங்களூருக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் வெற்றி பெற்றது. 5 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரை வீழ்த்தி ஹைதராபாத் வெற்றி பெற்றது.