ஐபிஎல் 16_வது லீக்: டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பேட்டிங்
ஐபிஎல் கிரிக்கெட் புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தில் ஹைதராபாத் தொடர் வெற்றி பதிவு செய்யுமா? என ரசிகர்கள் எதிர்பார்ப்பு.
கடந்த 7-ம் தேதி தொடங்கிய ஐ.பி.எல் தொடர் 11_வது சீசனின், இன்று நடைபெறும் 16_வது லீக் போட்டியில் ஹைதராபாத் சன் ரைசர்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டம் இன்று இரவு 8 மணிக்கு மொஹாலி மைதானத்தில் நடைபெற உள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தில் ஹைதராபாத் அணியும், மூன்றாவது இடத்தில் பஞ்சாப் அணியும் உள்ளது.
சன் ரைசர்ஸ் ஹைதராபாத் (Sunrisers Hyderabad) அணி இதுவரை 3 லீக் போட்டிகளில் விளையாடி உள்ளது. முதல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை ஒன்பது விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இரண்டாவது போட்டியில் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் மும்பையை வென்றது. மூன்றாவது போட்டியில் கொல்கத்தா அணியை ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. விளையாடிய மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.
அதேபோல கிங்ஸ் XI பஞ்சாப் (Kings XI Punjab) அணி இதுவரை 3 லீக் போட்டிகளில் விளையாடி உள்ளது. முதல் போட்டியில் டெல்லி அணியை ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இரண்டாவது போட்டியில் பெங்களூரு அணியிடம் நான்கு விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. மூன்றாவது போட்டியில் நான்கு ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணியை வென்றது. விளையாடிய மூன்று போட்டிகளிலும் இரண்டு போட்டியில் வெற்றியும், ஒரு போட்டியில் வெற்றியும் பெற்றுள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் புள்ளி பட்டியலில் அடுத்தடுத்து இடத்தில் இருக்கும் இரு அணிகள் மோதுவதால், இன்றைய ஆட்டம் இரண்டு அணிகளுக்கும் முக்கியமானதாக இருக்கும்.
இதுவரை மொஹாலி மைதானத்தில் நடைபெற்ற இரு அணிகளுக்கு இடையிலான நான்கு போட்டிகளிலும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் வெற்றி பெற்றுள்ளது.