நரேன், தினேஷ் அதிரடியால் சிதைந்துப்போன பஞ்சாப் அணி!
IPL 2018 தொடரின் 44-வது போட்டியில் கொல்கத்தா அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது!
IPL 2018 தொடரின் 44-வது போட்டியில் கொல்கத்தா அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது!
IPL 2018 தொடரின் போட்டிகள் தற்போது விருவிருப்பாக நடைப்பெற்று வருகிறது. இத்தொடரின் போட்டிகள் இந்தியா முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் நடைப்பெற்று வருகிறது.
இத்தொடரின் 44-வது போட்டியில் கொல்கத்தா மற்றும் பஞ்சாப் அணிகள் தற்போது விளையாடி வருகின்றன. இந்தூர் மைதானத்தில் நடைப்பெற்று வரும் இப்போட்டியில் டாஸ் வென்ற டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்து விளையாடியது.
கொல்கத்தா அணி தரப்பில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய கிரிஸ் லெயன் மற்றும் சுனில் நரேன் இருவரும் அதிரடியான துவக்கத்தினை வெளிப்படுத்தினர். 17 பந்துகளில் 27 ரன்கள் குவித்து லெயன் வெளியேறிய போதிலும் மற்றொரு வீரரான சுனில் நரேன் அதிரடியாக விளையாடி வெறும் 36 பந்துகளில் 75 ரன்கள் குவித்தார். இத்தொடரில் இது இவருடைய இரண்டாவது அரை சதமாகும்.
ஆட்டத்தின் பாதியில் இவரது விக்கெட் விழும் நிலையில் தப்பிய இவர் தனது அதிரடியை குறைக்கவில்லை. பின்னர் ஆண்ட்ரிவ் டை வீசிய பந்தில் ராகுலிடம் கேட்சை கொடுத்து வெளியேறினார். எனினும் இவரது ரன் அணியின் வெற்றிக்கான நிகழ்தகவினை அதிகரித்து உள்ளது.
இவருக்கு பின்னர் களமிறங்கிய தினேஷ் கார்த்திக் அதிரடி ஆட்டத்தினை வெளிப்படுத்தி 23 பந்துகளில் 50 ரன்கள் குவித்தார். இதர வீரகளும் இரண்டு இலக்க எண்களுடன் வெளியேற கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 245 ரன்கள் குவித்தது.
இதனையடுத்து 246 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்கியது.
பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய ராகுல் 66(29) மற்றும் கெயில் 21(17) ரன்களில் வெளியேற பின்னர் வந்த வீரர்களும் சொற்ப ரன்களில் வெளியேறினர். கேப்டன் அஷ்வின் 45(22) மற்றும் பென்ச் 34(20) நிதானமான ஆட்டத்தினை வெளிப்படுத்து அணிக்கு பலம் சேர்த்தனர். எனினும் பஞ்சாப் அணியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 214 ரன்கள் மட்டுமே குவிக்க முடிந்தது. இதனால் கொல்கத்தா அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றதாக அறிவிக்கப்பட்டது!