தற்போது ஐ.பி.எல் டி-20 கிரிக்கெட் போட்டியின் லீக் தொடர் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. நேற்று இரவு 8 மணியளவில் நடைபெற உள்ள 43_வது லீக் ஆட்டத்தில் சென்னை அணியும், ராஜஸ்தான் அணியும் மோதின. இந்த போட்டி ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் நடைபெற்றது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இரண்டாவது இடத்தில் இருக்கும் வலுவான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் ஆறாவது இடத்தில் இருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மோதியது. எனவே பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற வேண்டும் என்றால், அடுத்தடுத்து போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற வேண்டிய நெருக்கடியான நிலையில் ராஜஸ்தான் அணி களம் இறங்கியது.


டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடினர். முதல் ஓவரிலேயே அதிரடியில் இறங்கிய சென்னை அணியின் ஸ்கோர் 19 இருக்கும் போது தொடக்க வீரர் அம்பதி ராயுடு 12(9) ரன்கள் எடுத்து அவுட் ஆனர். பின்னர் வந்த ரெய்னா அதிரடியா ஆடி அரைசதத்தை பூர்த்து செய்தார். கடைசியாக 20 ஓவர் முடிவில் சென்னை அணி நான்கு விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்தது.


 



 


இதனையடுத்து 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் ராஜஸ்தான் அணி களம் இறங்கியது. ஜோஸ் பட்லே அதிரடியால் ராஜஸ்தான் அணியின் ஸ்கோர் வெற்றியை நோக்கி சென்றது. சீரான இடைவெளியில் விக்கெட் சரிந்தாலும், ஒன் மேன் ஆர்மி போல நிலைத்து நின்று 60 பந்துகளில் 95 ரன்கள் எடுத்து தனது அணிக்கு வெற்றியை தேடி தந்தார். ராஜஸ்தான் அணி 19.5 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டது ராஜஸ்தான் ராயல்ஸ்.


 



 


பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை பெரும் என எதிர்பார்க்கப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, நேற்றைய போட்டியில் தோல்வியுற்றதால், அடுத்த சுற்றுக்கு வாய்ப்பு பெற வில்லை. எஞ்சியுள்ள ஆட்டங்களில் ஏதாவது ஒரு ஆட்டத்தில் வெற்றி பெற்றாலே பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை சென்னை அணி பெற்றுவிடும்.


 



 


தற்போது புள்ளி பட்டியலில் சென்னை அணி 2_வது இடத்திலும், ராஜஸ்தான் அணி 6_வது இடத்திலும் உள்ளது. இதுவரை ஜெய்பூர் மைதானத்தில் அதிகபட்சம் ரன்கள் அடித்த வீரர்கள் பின்வருமாறு:-


98*S Watson v SRH, 2013
98 A Rahane v KXIP, 2012
95*KL Rahul v RR, 2018
95*J BUTTLER v CSK, 2018