தற்போது ஐ.பி.எல் டி-20 கிரிக்கெட் போட்டியின் லீக் தொடர் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. நேற்று இரவு 8 மணியளவில் நடைபெற உள்ள 48_வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணியும், பெங்களூரு அணியும் மோதின. இந்த போட்டி இந்தோர் ஹோல்கர் ஸ்டேடியத்தில் நடைபெற்றது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி பந்து வீச்சு தேர்வு செய்தார். தனது ஆட்டத்தை தொடங்கிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களாக கேஎல் ராகுல், கிறிஸ் கெய்ல் களம் இறங்கினார்கள். பெங்களூர் அணியினரின் அபாரமான பந்து வீச்சை சமாளிக்க முடியமால் பஞ்சாப் அணி 15.1 ஓவருக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்து 88 ரன்கள் மட்டுமே எடுத்தது. 


இதையடுத்து, 89 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூர் அணி விக்கெட் இழப்பின்றி 8.1 ஒவரில் 92 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில்  வெற்றி பெற்றது. கோலி 48 ரன்னும், பர்திவ் படேல் 40 ரன்னும் எடுத்து அவுட்டாகாமல் களத்தில் இருந்தனர்.


தற்போது புள்ளி பட்டியலில் பெங்களூர் அணி 7_வது இடத்திலும், பஞ்சாப் அணி 5_வது இடத்திலும் உள்ளன.