ஐபிஎல் 2018: பஞ்சாப் அணிக்கு பதிலடி கொடுக்குமா? ஹைதராபாத் அணி
இன்று இரவு 8 மணிக்கு ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெறும் போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.
இன்று இரவு 8 மணிக்கு ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெறும் போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.
ஹைதராபாத் அணி விளையாடிய ஆறு போட்டிகளில் நான்கு வெற்றியையும், இரண்டு தோல்வியையும் சந்தித்துள்ளது. தொடர்ந்து முதல் மூன்று போட்டிகளில் வெற்றி பெற்ற ஹைதராபாத் அணி நான்காவது போட்டியில் பஞ்சாப் அணியிடம் 15 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது. 5_வது போட்டியில் சென்னையிடம் 4 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.
ஏற்கனவே பஞ்சாப் அணியிடம் தோல்வி அடைந்துள்ளதால், இன்று பழிதீர்க்குமா? என ஹைதரபாத் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். புள்ளி பட்டியலில் 3_வது இடத்தில் உள்ளது.
மூன்று போட்டிகளில் விளையாடிய ஷிகர் தவான் 135 ரன்கள் மட்டும் எடுத்துள்ளார். இன்றைய போட்டியில் அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தக் கூடும். அதேவேளையில் ஆறு ஆட்டங்களில் விளையாடி 259 ரன்கள் எடுத்துள்ள வில்லியம் பஞ்சாப் அணிக்கு சிம்ம சொப்பனமாக இருப்பார் என எதிர்பார்க்கபடுகிறது.
அஸ்வின் தலைமையிலான பஞ்சாப் அணி புள்ளி பட்டியலில் 2_வது இடத்தில் உள்ளது. ஆறு ஆட்டங்களில் 5 போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களான கிறிஸ் கெயில் மற்றும் கே.எல்.ராகுல் நல்ல பார்மில் உள்ளனர். இந்த தொடரில் ஹைதரபாத் அணிக்கு எதிராக கிறிஸ் கெயில் 63 பந்துகளில், 104 ரன்கள் விளாசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பஞ்சாப் அணியும், ஹைதராபாத் அணியும் 11 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதி உள்ளது. அதில் 8 ஆட்டங்களில் ஹைதராபாத் அணியும், 3 ஆட்டங்களில் பஞ்சாப் அணியும் வெற்றி பெற்றுள்ளது.
ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தை பொருத்த வரை இரு அணிகளும் 5 முறை மோதியுள்ளது. 4 ஆட்டங்களில் ஹைதராபாத்தும், ஒரு போட்டியில் பஞ்சாப் அணியும் வெற்றியை பதிவு செய்துள்ளது.
ஏற்கனவே பஞ்சாப் அணியிடம் தோல்வி அடைந்துள்ள ஹைதரபாத் அணி தனது சொந்த மண்ணில் பழிதீர்த்துக் கொள்ளுமா? என்று இன்று இரவு முடிவு தெரியும்.