ஐ.பி.எல் தொடர் 11_வது சீசனின் 14_வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் நேற்று மோதின.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி ஆறு விக்கெட் இழப்புக்கு 213 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக அணியின் தலைவர் ரோஹித் சர்மா 94 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். 214 ரன்கள் வெற்றிக்கு தேவை என்ற நிலையில் களம் இறங்கிய பெங்களூரு அணி (Royal Challengers Bangalore) எட்டு விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 46 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி (Mumbai Indians) வெற்றி பெற்றது.


பெங்களூரு அணி தோல்வி அடைந்தாலும், அந்த அணியின் கேப்டன் விராத் கோலி அதிகபட்சமாக 92 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன் மூலம் ஐபிஎல் (Indian Premier League) போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை படைத்தார்.


நேற்று அவர் 31 ரன்கள் எடுத்த போதே இந்த சாதனைய செய்தார். இதற்கு முன்பாக, தற்போது சென்னை அணியில் விளையாடி வரும் சுரேஷ் ரெய்னா எடுத்திருந்த 4558 ரன்களே சாதனையாக இருந்தது.


விராத் கோலி ஐபிஎல் போட்டியில் 4619 ரன்கள் எடுத்துள்ளார். அதில் 4 சதங்களும், 32 அரை சதங்களும் அடங்கும். இவரின் அதிகபட்ச ஸ்கோர் 113 ரன்கள் ஆகும். ஐபிஎல் போட்டியில் நான்கு விக்கெட்டும் எடுத்துள்ளார்.