IPL_2018: பஞ்சாப் அணிக்கு 192 ரன்கள் இலக்கு!!
பஞ்சாப் அணிக்கு 192 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கொல்கத்தா: ஐ.பி.எல் டி-20 கிரிக்கெட் தொடரில் இன்று கொல்கத்தா மற்றும் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் பவுலிங்கை தேர்வு செய்தது.முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் குவித்தது. பஞ்சாப் அணிக்கு 192 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஐ.பி.எல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் 11-வது சீசன் நடந்து வருகிறது. மொத்தம் 60 ஆட்டங்கள் கொண்ட இந்த சீசனின் 18-வது ஆட்டம் கொல்கத்தாவில் நடைபெறுகிறது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதுகின்றன. இந்த சீசனில் விளையாடும் 8 அணிகளில் 7 அணிகளின் கேப்டன்களாக இந்தியர்கள் உள்ளனர். அதில் இரண்டு அணிகளின் கேப்டன்களாக தமிழர்கள் உள்ளனர்.
தமிழகத்தைச் சேர்ந்த அஸ்வின் கேப்டனாக உள்ள பஞ்சாப் அணியும், தினேஷ் கார்த்திக் கேப்டனாக உள்ள கொல்கத்தா அணியும் முதல் முறையாக நேரடியாக மோதுகின்றன.கொல்கத்தா அணி 5 போட்டிகளில் 3 வெற்றி, 2 தோல்விகளுடன் 6 புள்ளிகளுடன், புள்ளிப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. பஞ்சாப் அணி 4 போட்டிகளில் 3 வெற்றி, ஒரு தோல்வியுடன் 6 புள்ளிகளைப் பெற்று 4-வது இடத்தில் உள்ளது.
கொல்கத்தாவில் நடைபெறும் ஆட்டத்தில் பஞ்சாப் டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்தது. முதலில் ஆடிய கொல்கத்தா 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் எடுத்தது. ஒரு பக்கம் விக்கெட்டுகள் தொடர்ந்து விழ, கிறிஸ் லைன் 41 பந்துகளில் 74 ரன்கள் சேர்த்தார். தினேஷ் கார்த்திக் 43 ரன்கள் எடுத்தார். பஞ்சாப் அணிக்கு 192 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.