IPL 2018 தொடரின் 5வது ஆட்டத்தில் Kolkata Knight Riders மற்றும் Chennai Super Kings  அணிகள் நேற்று இரவு 8 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதின.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதில் முதலில் டாஸ் வென்ற Chennai Super Kings அணி பந்து வீச்சு தேர்வு செய்தது. இதையடுத்து Kolkata Knight Riders அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கிறிஸ் லின், சுனில் நரேன் களமிறங்கினர்.


நரேன் 4 பந்துகளில் 12 ரன்கள் எடுத்து ஹர்பஜன் சிங் பந்தில் ஆட்டமிழந்தார். 
உத்தப்பா நிதானமாக விளையாடி ரன் சேர்த்தார். 
லின் 22 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 
நிதிஷ் ராணா 16 ரன்னில் ஆட்டமிழந்தார். 
உத்தப்பா 29 ரன்னில் ரன் அவுட் ஆனார். 
ரிங்கு சிங் 2 ரன்னில் ஆட்டமிழந்தார். 
ரசல் 36 பந்தில் 88 ரன்களுடன் களத்தில் இருந்தார்.  
தினேஷ் கார்த்திக் 26 ரன்னில் ஆட்டமிழந்தார்.


இதனையடுத்து பேட்டிங் செய்த Kolkata Knight Riders அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழந்து 202 ரன்கள் எடுத்திருந்தது.


203 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கிய Chennai Super Kings அணி, தொடக்க ஆட்டக்காரர்களாக ஷேன் வாட்சன், அம்பதி ராயுடு இறங்கினர்.


ஷேன் வாட்சன் 19 பந்துகளில் 3 சிக்சர், 3 பவுண்டரியுடன் 42 ரன்கள் எடுத்து அவுட்டானார். 
சுரேஷ் ரெய்னா 14 ரன்னில் அவுட்டானார். 
தோனி 25 ரன்களில் அவுட்டானார். 
பில்லிங்ஸ் 56 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
இறுதி ஓவரில் 17 ரன்கள் தேவைப்பட்டது. பிராவோவும், ஜடேஜாவும் அடித்து அணியை வெற்றிக்கு அழைத்து சென்றனர். இறுதியில், Chennai Super Kings அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.