IPL_2018: சிக்சர் மழையில் பெங்களூரை வீழ்த்திய சென்னை அணி!
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 24-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அசத்தல் வெற்றி பெற்றது.
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற ஐ.பி.எல் டி-20 கிரிக்கெட் தொடரில் 24_வது லீக் போட்டியில் சென்னை அணியும், பெங்களூரு அணியும் மோதின.
இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனி பெங்களுரூ அணியை பேட்டிங் செய்ய அழைத்தார்.
இதனையடுத்து களமிறங்கிய பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்கள் எடுத்தது.
அதிகபட்சமாக டி வில்லியர்ஸ் 68 ரன்களும், டி காக் 53 ரன்களும், மன்தீப் சிங் 32 ரன்களும் எடுத்தனர்.
இதனையடுத்து 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது.
ஆனால், சென்னை அணிக்கு முதல் ஓவரிலேயே அதிர்ச்சி காத்திருந்தது. துவக்க வீரர் வாட்சன் 7 ரன்களில் ஆட்டமிழந்தார்.
பின்னர் வந்த ரெய்னா, ஜடேஜா, பில்லிங்ஸ் ஒற்றை இழக்க ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க சென்னை அணி 74 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது
அடுத்து களமிறங்கிய சுரேஷ் ரெய்னா, அம்பதி ராயுடுவுடன் ஜோடி சேர்ந்தார். இதில் அம்பதி ராயுடுவின் அதிரடியால் சென்னை அணி 5 ஓவர்களில் 50 ரன்களை சேர்த்தது.
பின்னர் 5-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ராயுடு-தோனி பெங்களூரு அணியின் பந்துவீச்சை சிதறடிதனர்.
இருவரும் அதிரடியாக விளையாடி அரைசதம் விளாசினர். 82 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ராயுடு ஆட்டமிழந்தார்.
இறுதியில் 19.4 ஓவர்களில் சென்னை அணி வெற்றி இலக்கை எட்டியது. இறுதி வரை ஆட்டமிழக்காமல் தோனி 70 ரன்கள் விளாசினார்.