ரயில் பயணிகளின் பயணத்தினை மேலும் எளிமையானதாக மாற்ற இந்திய ரயில்வே நிறுவனம் OLA நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ரயில் பயணிகளின் பயணத்தின் ஆதி முதல் அந்தம் வரை சேவை மேற்கொள்ளும் வகையில் IRCTC ஆனது, பிரபல வாடகை வாகன நிறுவனமான OLX-உடன் இணைந்து செயல்பட திட்டமிட்டுள்ளது.


இந்த ஒப்பந்தத்தின் படி, IRCTC இணையதளம் அல்லது மொபைல் செயலில் ரயில் டிக்கெட்டுகளை பதிவு செய்யும் பயணிகளுக்கு, ரயில்வே நிலையத்திலிருந்து தங்கள் வீட்டிற்கு செல்ல ஏதுவாக OLA வாகனங்களை IRCTC தளத்திலேயே முன்பதிவு செய்துக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து OLA தெரிவிக்கையில், இந்த சேவையின் மூலம் பயணிகளுக்கு வழக்கமாக அளிக்கபடும் வசதிகள் போலவே Ola Micro, Ola Mini, Ola Auto, Ola Share etc வசதிகள் அளிக்கப்படும். இதற்காக கூடுதல் கட்டணங்கள் வசூளிக்கப்பட மாட்டாது என தெரிவித்துள்ளது.


இந்திய ரயில்வே துறையின் செய்தி தொடர்பாளர் இது குறித்து தெரிவிக்கையில், பயணிகளின் பயணத்தினை எளிமையாக்கும் நோக்கிலேயே இந்த வசதி கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும் இந்த வசதியின் மூலம் பயணரகள் தங்கள் பயணத்திற்கு 7 முன்பு வரையில் OLA வாகனங்களை முன்பதிவு செய்துகொள்ளலாம் எனவும் தெரவித்துள்ளார்!