பைபிளின் புதிய ஏற்பாட்டில் இயேசு கிறிஸ்து உவமைகளாகவும் உருவகங்களாகவும் கூறிய கதைகள், மக்களை நல்வழிபடுத்தும் நோக்கில் அமைந்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எனவே, அவற்றை உலகம் முழுவதும் உள்ள மக்களால் பெரிதும் விரும்பி பின்பற்றி வருகின்றனர். 


ஆகையால் இந்த கதையின் மூலம் இயேசு கிறிஸ்து மக்களுக்கு  கூறிய விசுவாச செய்திகளை பற்றி பார்போம்....!!


ஒருமுறை இயேசு கிறிஸ்து தேவாலயத்தில் இறைவனின் கட்டளைகளையும் அவற்றை மனிதர்கள் கடைப்பிடிப்பது பற்றியும் போதித்துக் கொண்டிருந்தார். 


போதனை முடிந்த பின்னர், ஒவ்வருவரும் வரிசையில் நின்று  தேவாலயத்தில் தங்களால் இயன்ற காசுகளைகாணிக்கை செலுத்தி வந்தார்கள்.


அந்தக் கால கட்டத்தில் வெள்ளி மற்றும் தங்க நாணயங்கள் மட்டுமே புழக்கத்தில் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.


அப்போது ஒரு தனவான் மிகப் பெரிய மூட்டையில் தங்க நாணயங்களை எடுத்து வந்து அனைவரின் பார்வையும் படும் படி காணிக்கை பெட்டியில் கொட்டினார்.


அதன்பிறகு அவர் மிகுந்த கம்பீரமாக நடந்து போனார். அவரைத் தொடர்ந்து, வந்த மற்றவர்களும் நூறுகளில், ஆயிரங்களில் காணிக்கை செலுத்தினர்.


அவர்களில் ஒருவராக  ஒரு கைம்பெண்ணும் தன்னிடம் இருந்த 2 வெள்ளிக் காசுகளை மட்டுமே காணிக்கை செலுத்தினார். 


ஆனால் அவள், மிகுந்த நடுக்கத்துடனும் கூச்சத்துடனும்  அந்தக் காணிக்கையைச் செலுத்திப் போனாள். 


அப்போது இயேசு கிறிஸ்து தன் சீடர்களை நோக்கிச் கூறிய வார்த்தை....!


“இங்கு காணிக்கை செலுத்தியவர்களிலேயே இந்தப் பெண்தான் அதிகம் காணிக்கை செலுத்தி இருக்கிறாள்.”  என்றார்.


எனெனில், மற்றவர்கள் எல்லோரும் தங்களிடம் உள்ளதிலிருந்து பாதியை காணிக்கை செலுத்தினர். 
 
ஆனால், அந்தக் கைம்பெண்ணோ தன்னிடம் அடுத்தவேளை உணவைத் தேடுவதற்கு வழியில்லாத நிலையில் இந்தக்காசுகளைத் தந்திருக்கிறார். 


அவள் தன்னை முழுவதுமாக இறைவனிடம் ஒப்படைத்திருக்கிறாள். அந்த விசுவாசம்தான் பெரிது என்றார்.


எனவே, இறைவன் நாம் எவ்வளவு பணம் தருகிறோம் என்று பார்ப்பதில்லை. எந்த சூழ்நிலையிலும் நம்முடைய விசுவாசம் எப்படி இருக்கிறது என்று தான் பார்க்கிறார். 


நம்முடைய தேவன் விசுவாசத்தின் தேவனவார். எனவே, ஒவ்வொரு மனிதரும் ஒரு செயலில் ஈடுபடும் முன்பு விசுவாசத்தை கடைபிடிக்க வேண்டும்.