பா. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் அடுத்த மாதம் வெளியாகவுள்ளது காலா திரைப்படம். இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா இன்று சென்னையில் உள்ள நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் பிரம்மாண்டமாக நடைபெறுகிறது.இந்த நிகழ்ச்சியினை திவ்ய தர்ஷினி தொகுத்து வழங்குகின்றார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காலா திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா என்றதும் காலை முதலே ரசிகர்கள் உற்சாகத்தில் இருந்தனர். பெரும்பாலான ரசிகர்கள் காலா படத்தின் கெட் அப்பான கருப்பு சட்டை, கருப்பு வேட்டி அணிந்து கொண்டு நிகழ்சிக்கு வந்திருந்தனர். 


மேலும், இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக எராளமான ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகளும் அழைக்கப்பட்டனர். இந்த கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் காவல் துறையினர் தவித்து வருகின்றனர். இந்த நிகழ்ச்சியின் முடிவில் ரஜினி அரசியல் குறித்து பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


முன்னதாக, காலா படத்தின்  9 ஆடியோ பாடல்கள் இணையதளத்தில் இன்று வெளியிடப்பட்டன. இதனை படத்தின் தயாரிப்பாளரான நடிகர் தனுஷ் டுவிட்டரில் வெளியிட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.