கமலுடன், அஜித் சந்திக்க வாய்ப்பு: மகிழ்ச்சியில் ரசிகர்கள்!
அஜீத்தின் விசுவாசம் படத்தின் படப்பிடிப்பு திட்டமிட்ட தேதியில் தொடங்கவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
விசுவாசம் படத்தின் படப்பிடிப்பு எப்போது துவங்கும் என அஜீத் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கார்த்திருக்கின்றனர். இந்தப் படத்துக்காக செட் வேலைகள் எல்லாம் தொடங்கப்பட்டுவிட்டன. ஆனாலும் சொன்னபடி மார்ச் 23ல் படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நேரத்தில் அஜீத் ஸ்டிரைக் முடிந்ததும் படத்தை ஆரம்பித்து விடலாம் என்றாராம். இது ரசிகர்களுக்கு சற்று வருத்தமே.
ஏற்கனவே விவேகம் படத்தின் விமர்சனங்களால் இயக்குனர் சிவா மீது அஜீத்தின் தீவிர ரசிகர்களுக்கு வருத்தம் இருந்து வருகிறது. இந்நிலையில் ஸ்டிரைக் பிரச்சனை வேறு. இதனால் ஆரம்பமே இப்படியா என கவலையில் இருக்கிறார்கள்.
ஆனால் வேலை நிறுத்தம் என்னவோ தமிழ்நாட்டில் தான். எனவே படப்பிடிப்பு முன்பே திட்டமிட்டது போல ஹைதராபாத் ராமோஜி பிலிம் சிட்டியில் தொடங்கும் என தற்போது தகவல் வந்துள்ளது.
இந்நிலையில், கமல் சமீபத்தில் தான் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கினார். மேலும், இந்தியன் 2-விற்கு பிறகு இனி படங்களிலேயே நடிக்க மாட்டேன் என்றும் கூறி வருகிறார்.
கமலின் இந்தியன் 2 படத்திற்காக ராமோஜிராவ் ப்லீம் சிட்டியில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு வருகின்றது.
இந்த ஸ்ட்ரைக் முடிந்தவுடன் இரண்டு படக்குழுவும் அங்கு செல்ல, கண்டிப்பாக அஜித்தும், கமலும் சந்திக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது. என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.