தூத்துக்குடி போராட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு கமல்ஹாசன் ஆறுதல்!
தூத்துக்குடியில் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்த அதிகாரம் கொடுத்தது யார்? என மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்!
12:19 23-05-2018
தூத்துக்குடி போராட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களை மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் அவர்கள் நேரில் சென்று சந்தித்து ஆருதல் தெரிவித்தார்!
தூத்துக்குடியில் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்த அதிகாரம் கொடுத்தது யார்? என மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்!
சென்னை ஆழ்வார்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன் தெரிவிக்கையில்... ஸ்டெர்லைட் ஆலைக்கு அரசே பூட்டு போட்டிருந்தால் இந்த வன்முறை சம்பவம் நடைபெற்று இருக்காது. ஸ்டெர்லைட் ஆலையை அரசு மூட வேண்டும், இறந்தவர்கள் குடும்பத்தை காக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் கர்நாட்டகாவில் நடைப்பெறவுள்ள முதல்வர் பதவியேற்பு விழாவில் மாலை பங்கேற்கவிருக்கும் அவர், அதற்கு முன்னதாக தூத்துக்குடி சென்று பாதிக்கப்பட்டவர்களை பார்வையிட இருப்பதாக தெரிவித்துள்ளார்.
போராட்டத்தில் ஏதற்பட்ட கலவரத்திற்கு பின்னர் தற்போது தூத்துக்குடி வேம்பார், குளத்தூர் உள்ளிட்ட இடங்களில் 25-ஆம் தேதி வரை 144 தடை உத்தரவை நீட்டித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். எனவே அப்பகுதியில் 5-க்கும் மேற்பட்ட நபர்கள் ஒன்றாகக் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. ஊர்வலங்கள், பொதுக்கூட்டங்கள் போன்றவை நடத்தத்வும் தடை விதிக்கப்பட்டுள்ளது.