காவிரி விவகாரத்தில் கர்நாடக விவசாயிகள், தமிழக விவசாயிகள் கலந்து பேசினால் அரசியல்வாதிகள் யாரும் நுழைய முடியாது என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காவிரி விவகாரம் குறித்து கர்நாடகா முதல்வர் குமாரசாமியை மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் நேற்று முன்தினம் நேரில் சந்தித்து பேசினார். பெங்களூருவில் உள்ள முதல்வர் இல்லத்தில் குமாசாரசாமியை சந்தித்து கமல் பேசினார்.


இச்சந்திப்பில் காவிரி பிரச்சனை மற்றும் தமிழ் சினிமாக்களை கர்நாடகாவில் வெளியிடுவது குறித்தும் கமல் கர்நாடாக முதல்வருடன் பேச்சு வார்த்தை நடத்தினர். இதையடுத்து, காவிரி நதிநீர் பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்று தொடர்ந்து அவர் வலியுறுத்தினார். இதற்கு அரசியல் கட்சியினரிடையே கடும் எதிர்ப்பு எழுந்தது.


இந்நிலையில், கமல்ஹாசனை, விவசாய சங்கங்களை சேர்ந்த அய்யாக்கண்ணு, தெய்வசிகாமணி ஆகியோர் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். சுமார் இரண்டு மணி நேரம் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது கமல்ஹாசனுக்கு வீரவாள் மற்றும் ஏர் கலப்பையை விவசாயிகள் சங்கத்தினர் பரிசாக அளித்தனர்.


இந்த சந்திப்பு குறித்து பேசிய அய்யாக்கண்ணு கூறும்போது...!


தமிழக விவசாயிகளை காப்பாற்ற யார் வந்தாலும் அவர்களை வரவேற்போம் என்றார். காவிரி விவகாரத்தில் கர்நாடக விவசாயிகளுடன், தமிழக விவசாயிகள் கலந்து பேச்சுவார்த்தை நடத்துவதில் எந்த தவறும் இல்லை என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.