டெல்லி: கர்நாடகா தேர்தலுக்கான நான்காவது கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது பாரதிய ஜனதா கட்சி.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


கர்நாடக மாநில சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 12-ம் தேதி நடைபெறுகிறது. தற்போது கர்நாடகாவை ஆளும் காங்கிரஸ் கட்சி ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளவும், பா.ஜ.க ஆட்சியை பிடிக்கவும் கடும் முயற்சியை மேற்கொண்டு வருகிறது. சில நாட்களுக்கு முன்னர் 72 பெயர்கள் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பா.ஜ.க வெளியிட்டிருந்தது. 


இதையடுத்து 82 பெயர்கள் கொண்ட இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை கடந்த 18-ம் தேதி வெளியிட்டது. அதில், பல ஊழல் வழக்கில் தொடர்புடையவர்களுக்கு சீட் கொடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், 59 பெயர்கள் கொண்ட மூன்றாவது கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சி கடந்த வெள்ளிகிழமை வெளியிட்டது.