கர்நாடகா தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. தேர்தல் முடிவுகளில் பாஜக 104, காங்கிரஸ் 78, மதச்சார்பற்ற ஜனதா தளம் 37 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. ஆட்சி அமைக்க தேவையான மெஜாரிட்டி(113 தொகுதிகள்) எந்த கட்சிக்கும் கிடைக்கவில்லை. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதனிடையே தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியாவதற்கு முன்பே அவசரம் அவசரமாக காங்கிரஸ் கட்சி, மதச்சார்பற்ற ஜனதா தளத்திற்கு ஆதரவு தெரிவித்து ஆளுநரிடம் நேற்று கடிதத்தினை அளித்தது.


அதேவேலையில் கர்நாடக மாநில பாஜக தலைவர் எடியூரப்பாவும் ஆட்சியமைக்க ஆளுநரிடம் கடிதத்தினை அளித்துள்ளார். கர்நாடகாவில் யார் முதல்வர் ஆவார் என குழப்பம் நிலவி வரும் நிலையில் வரும் மே 28 ஆம் நாள் இதற இரண்டு தொகுதிகளுக்கு (ராஜேஷ்வரி நகர், ஜெய்நகர்) தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த இரண்டு தொகுதிகளின் வெற்றி முதல்வரை தீர்மாணிக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இந்நிலையில், கர்நாடகாவில் காங்கிரஸ்- மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணியால் கோபமடைந்த எம்எல்ஏ-க்களை இழுக்க பாஜக திட்டம் போட்டு வருதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக பேசியுள்ள பாஜகவின் ஈஸ்வரப்பா, காங்கிரஸ் கட்சி மதச்சார்பற்ற ஜனதா தளத்துடன் கூட்டணி அமைப்பதை விரும்பாத அக்கட்சியை சேர்ந்த எம்எல்ஏக்களை பாஜக தீவிரமாக கண்காணித்து வருவதாக தெரிவித்துள்ளார்.


இதற்கிடையில், குமாரசாமி தலைமையில் இன்று துவங்கிய மதசார்பற்ற ஜனதா தளம் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் மஜத.,வை சேர்ந்த 2 எம்எம்ஏ.,க்கள் பங்கேற்கவில்லை. அதேபோன்று, காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில்  4 எம்எல்ஏக்கள் பங்கேற்காமல் மாயமாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது. 


இதனால், கர்நாடகாவில் ஆட்சி அமைப்பது யார் என்று கர்நாடக அரசியலில் நொடிக்கு நொடி திருப்பம் ஏற்பட்டு வருகிறது!