விவசாய குடும்பத்தில் பிறந்த ஜி.டி.தேவகவுடா 1978ம் ஆண்டு, அரசியலில் கால் வைத்தார். 1983ம் ஆண்டு முதல் சித்தராமையாவுடன் ஜி.டி.தேவகவுடாவுக்கு நட்பு ஏற்பட்டது. இந்த நட்பு சுமார் 20 வருடங்களுக்கும் மேலாக நெருக்கமாக தொடர்ந்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜி.டி.தேவகவுடா முதல் முறையாக வகித்த பதவி ஜில்லா பஞ்சாயத்து தலைவர். இதன்பிறகு ஹுன்சூர் சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். காங்கிரசில் அரசியல் வாழ்க்கையை ஆரம்பித்தாலும், 2007ம் ஆண்டில் ஜி.டி.தேவகவுடா பாஜகவில் இணைந்தார். 


வருணா தொகுதியில் சித்தராமையா வெற்றி பெற்ற பிறகு சாமுண்டேஸ்வரி தொகுதிக்கு 10 வருடங்களுக்கு பிறகு போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில், இன்றைய வாக்கு எண்ணிக்கையின் 4வது சுற்று முடிவில் ஜி.டி.தேவகவுடா ர் சித்தராமையாவை விட 11,624 அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.