கடந்த 12 ஆம் தேதி கர்நாடகாவில் மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 222 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இதன் வாக்கு எண்ணிக்கையானது இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது. கிட்டத்தட்ட வாக்கு எண்ணிக்கை தொடங்கி அடுத்த நான்கு மணி நேரத்தில் யார் ஆட்சி அமைக்க போகிறார் என முடிவுகள் தெரிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கர்நாடகா மாநிலம் முழுவதும் மொத்தம் 38 மையங்களில், 283 அரங்குகளில் ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. காலையில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே காங்கிரஸ் முன்னிலை வகித்து வந்தது. இருப்பினும் அக்கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் சித்தராமையா பின்னடைவில் இருந்தார். பின்னர் அடுத்த சுற்றில் முன்னிலைக்கு வந்தார்.


முன்னிலையில் உள்ள நிலவரங்களில் படி, காங்கிரஸ் 75 தொகுதிகளை நெருங்கும் போது பாஜகவும் 75 தொகுதிகளை நெருங்கியது. தேவகவுடாவின் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி 26 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.


இந்நிலையில் பாஜக முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா அவர் போட்டியிட்ட சிகாரிபுரா தொகுதியில் முன்னிலை வகிக்கிறார். தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரை விட அதிக வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார்.