224 தொகுதிகள் கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கு வரும் 12 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால், ஆட்சியை கைப்பற்றும் முயற்சியில் பாரதிய ஜனதா கட்சியும், ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள காங்கிரஸ் கட்சியும், ஆட்சியில் பங்குபெறும் நோக்கில் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியும் வாக்கு சேகரிப்பதற்காக அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கர்நாடகா தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த இரண்டு ஆண்டுகளாக தேர்தல் பிரச்சாரத்தில் கலந்துகொள்ளாத காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, இம்முறை கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்தில் கலந்துக்கொண்டு பொது கூட்டத்தில் பேசி வருகிறார். பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த பிரதமர் மோடி கிட்டத்தட்ட 15-க்கு மேற்ப்பட்ட இடங்களில் தேர்தல் பிரச்சாரத்தில் கலந்துக்கொண்டு பேசியுள்ளார். பாரதிய ஜனதா கட்சி தலைவர்களும், காங்கிரஸ் கட்சி தலைவர்களும் கர்நாடகவை ஆக்கிரமித்து உள்ளனர்.


அடுத்த ஆண்டு(2019) நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு முக்கிய முன்னோட்டமாக கர்நாடக தேர்தல் பார்க்கப்படுவதால், இரண்டு கட்சிகளின் முக்கிய தலைவர்களும் கர்நாடகாவில் முகாமிட்டு, இன்று இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளனர்.


இன்றுடன் கர்நாடக சட்டப்பேரவை தேர்தலுக்கான பிரச்சாரம் முடிவடை உள்ளதால், இன்றை தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.