மே 23 கர்நாடக மாநில அமைச்சர்கள் பதவியேற்பு விழா -முழு விவரம்
நாளை கர்நாட்டக அமைச்சர்கள் பதவியேற்க உள்ளனர். இந்த பதவியேற்ப்பு விழாவில் பல அரசியல் தலைவர்கள் கலந்துக் கொள்கின்றனர்.
23 ஆம் தேதி கர்நாட்டக அமைச்சர்கள் பதவியேற்க உள்ளனர். இந்த பதவியேற்ப்பு விழாவில் பல அரசியல் தலைவர்கள் கலந்துக் கொள்கின்றனர்.
கடந்த 15 ஆம் தேதி கர்நாட்டக சட்டமன்ற தேர்தலின் வாக்குகள் எண்ணப்பட்டன, 222 தொகுதிகளுக்கு நடைபெற்ற கர்நாடக சட்டசபை தேர்தலில் பாஜக 104 தொகுதிகளிலும், காங்கிரஸ் 78 தொகுதிகளிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 37 இடங்களிலும் வெற்றிப்பெற்றன. யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில், அதிக தொகுதிகளை வென்ற பாஜக-வை ஆட்சி அமைக்குமாறு கர்நாடக கவர்னர் அழைப்பு விடுத்தார். இதனையடுத்து எடியூரப்பா முதல்வராக பதவியேற்றார். மேலும் 15 நாள் அவகாசத்தில் பெருன்பான்மையினை நிருப்பிக்க வேண்டும் என்ற நிபந்தனையும் ஆளுநர் விதித்தார். ஆனால் பெருபான்மையை (மே 19) நிருப்பிக்க வேண்டும் என கோர்ட் உத்தரவிட்டது.
மே 19 ஆமா தேதி நடந்த நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்னரே, உருக்கமான உறையினை நிகழ்த்திய முதல்வர் எடியூரப்பா, தனது முதல்வர் பதவியினை ராஜினாமா செய்தார். அவர் ராஜினாமா செய்ததை அடுத்து, காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதாதள கட்சி கூட்டணியின் முதல்வர் குமாரசாமி பதவியேற்க ஆளுநர் அழைப்பு விடுத்தார்.
இந்நிலையில் மதச்சார்பற்ற ஜனதா கட்சியின் சட்டமன்ற குழு தலைவர் குமாரசாமி நாளை முதல்வராக பதவியேற்கவுள்ளார். குமாரசாமி அமைச்சரவையில் காங்கிரசுக்கு 22 அமைச்சர் பதவியும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு 12 அமைச்சர் பதவியும் என மொத்தம் 34 அமைச்சர்கள் பதவியேற்க உள்ளனர்.
மேலும் கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வரா துணை முதல்வராக நாளை பதவியேற்க உள்ளதாக கூறப்படுகிறது.