சாமுண்டீஸ்வரி தொகுதியில் சித்தராமையா வேட்பு மனுவை தாக்கல்!
எதிர்வரும் கர்நாடக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக அம்மாநில முதல்வர் சித்தராமையா அவர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தார்!
எதிர்வரும் கர்நாடக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக அம்மாநில முதல்வர் சித்தராமையா அவர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தார்!
கார்நாடக மாநிலத்தின் சட்டமன்ற தேர்தல் வரும் மே 12-ஆம் நாள் நடைப்பெறவுள்ள நிலையில், நாட்டின் இரண்டு பிரதான கட்சிகளும் அனல் பறக்கும் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி காண அனைத்து கட்சிகளும் பல யுக்திகளை கையாண்டு வருகிறது.
ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள முதல்வர் தலமையிலான காங்கிரஸ் கட்சியும், அவர்களிடன் இருந்து ஆட்சியை கைப்பற்ற பாஜக-வும் பனிப்போர் நடத்தி வருகின்றன. அதே வேலையில் தேர்தலில் வெற்றிப் பெற அறிவிக்கப்பட இருக்கும் வேட்பாளர்களும் தங்கள் தரப்பிற்கு மக்கள் மனதில் இடம்பிடிக்க பல விஷயங்களை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், மைசூரு மாவட்டத்தின் சாமுண்டீஸ்வரி தொகுதியில் கர்நாடக முதல்வர் சித்தராமையா நேற்று காலை தமது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இதனையடுத்து, சித்தராமையாவை எதிர்த்து போட்டியிடும் மஜத ஜி.டி. தேவேகவுடா மனு தாக்கல் செய்தார்.
இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் சித்தராமையா... கர்நாடகா-வில் மோடி அலை வீச வாய்ப்பு இல்லை, காங்கிரஸ் ஆட்சி மீண்டும் அமைவது உறுதி. சாமுண்டீஸ்வரி தொகுதியில் வென்று மீண்டும் முதல்வராக பதவியேற்பேன் என தெரிவித்துள்ளார்.