பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள கர்நாடக சட்டசபை தேர்தல் மே 12-ல் நடைபெறுகிறது. இத் தேர்தலில் காங்கிரஸ், பாஜக, மதசார்பற்ற ஜனதாதளம் ஆகிய 3 கட்சிகள் நடுவே மும்முனை போட்டி நிலவுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில், தேர்தலை முன்னிட்டு பெங்களூரு ராஜ ராஜேஸ்வரி நகரில் ஒரு வீட்டில் பத்தாயிரம் வாக்காளர் அடையாள அட்டைகளை பறக்கும் படையினர் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். 


இதனிடையே ராஜ ராஜேஸ்வரி நகரில் நாளை நடைபெறும் வாக்குப் பதிஐ ஒத்திவைக்க வேண்டும் என்றும் அரசியல் கட்சிகள் வலியுறுத்தின. இந்த நிலையில் ராஜ ராஜேஸ்வரி நகர் தொகுதியில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


அதன்படி, அத்தொகுதியில் மே மாதம் 28-ம் தேதி தேர்தல் நடைபெறும் என்றும், 31 தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. 


வாக்காளர் அடையாள அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக பாரதீய ஜனதா மற்றும் காங்கிரஸ் இடையே மோதல் வெடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.