18:20 15-05-2018
கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதாதளம் ஆட்சியமைக்க காங்கிரஸ் ஆதரவளிக்கும் முடிவை ஆளுநரிடம் தெரிவித்துள்ளதாக சித்தராமையா கூறியுள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தொடர்ந்து அவர், ஆட்சியமைக்க உரிமை கோரி ஆளுநரிடம் கடிதம் வழங்கியுள்ளோம்; முடிவெடுப்பது ஆளுநரின் கையில்தான் உள்ளது என்றார்.



காங்கிரஸ் கட்சி ஆதரவு அளித்துள்ள நிலையில், ஆட்சி அமைக்க உரிமை கோரி ஆளுநருக்கு குமாரசாமி கடிதம் எழுதியுள்ளார். ஆளுநர் வாஜுபாயி வாலாவுக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் சந்திக்க நேரம் கோரியுள்ளார்.


மஜதவை ஈர்க்க பாஜக தலைவர்கள் முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில், காங்கிரஸ் ஆதரவை தாங்கள் ஏற்றுவிட்டதாக குமாரசாமி கூறிவிட்டார். மிக வேகமாக கர்நாடக அரசியல் களம் முன் நகர்வதன் அறிகுறியாக இது பார்க்கப்படுகிறது.


தங்கள் கட்சி தலைமைக்கு வருவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில் பெங்களூருவில் தேவகவுடா இல்லம் முன்பு மதசார்பற்ற ஜனதா தளம் கட்சித் தொண்டர்கள் குவிந்தனர். தேவகவுடா இல்லத்தில் தேவகவுடா, குமாரசாமி ஆலோசனை நடத்தினர். இதையடுத்து, தற்போது குமாரசாமி தலைமையில் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியினர் ஆளுநர் மாளிகைக்கு வருகை புரிந்துள்ளார்!