கடைக்குட்டி சிங்கம் திரைப்படத்தின் டீஸர் வெளியானது!
இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்துள்ள திரைப்படம் ‘கடைக்குட்டி சிங்கம்’. இப்படத்தின் டீஸரினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்!
இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்துள்ள திரைப்படம் ‘கடைக்குட்டி சிங்கம்’. இப்படத்தின் டீஸரினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்!
தீரன் அதிகாரம் ஒன்று படத்திற்கு பிறகு கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் கடைக்குட்டி சிக்கம். இப்படத்தினை இயக்குனர் பாண்டிராஜ் இயக்குகின்றார், நாயகியாக ‘வனமகன்’ சயீஷா நடித்துள்ளார். மேலும், இப்படத்தில் பிரியா பவானி சங்கர், சத்யராஜ், பொன்வண்ணன், பானுப்ரியா, விஜி சந்திரசேகர், சூரி, ஸ்ரீமன், செளந்தரராஜா ஆகியோர் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். டி.இமான் இசையமைத்துள்ளார். 2-டி எண்டெர்டெயின்மெண்ட்ஸ் சார்பில் சூர்யா இந்தப் படத்தைத் தயாரித்து வருகிறார். சென்னை, தென்காசி, காரைக்குடி பகுதிகளில் இதன் ஷூட்டிங் நடைபெற்றது. தமிழில் வெளியாகும் அதேவேலையில் இப்படம் தெலுங்கில் ‘சின்ன பாபு’ என்ற பெயரில் வெளியாகவுள்ளது.
விரைவில் திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில் தற்போது இப்படத்தின் டீஸரினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.