குரங்கணி காட்டுத்தீ விபத்தில் சிக்கி உயிரிழந்த சென்னையைச் சேர்ந்த அனு​வித்யா குடும்பத்துக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் நேரில் ஆறுதல் தெரிவித்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தேனி மாவட்டம் குரங்கணி வனப்பகுதியில் டிரக்கிங் சென்ற 36 பேர் காட்டுத்தீயில் சிக்கினர். இந்நிலையில் ஏற்கனவே காட்டுத்தீயில் சிக்கி 12 பேர் உயிரிழந்த நிலையில் தற்போது, குரங்கணி தீ விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது.


காட்டுத் தீ சம்பவம் குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில், குரங்கணி வனப்பகுதிக்கு நேற்று 39 பேர் டிரக்கிங் சென்றுள்ளனர். காட்டுக்குள் டிரக்கிங் சென்று கொண்டிருந்த போது திடீரென ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி உள்ளனர். இதனால் இருள் சூழ்ந்ததால் சிலர் அங்கும் இங்கும் சிதறி ஓடி உள்ளனர். இதில் சிலர் பள்ளத்தாக்குகளுக்குள் விழுந்துள்ளனர். 


இவர்களில் 6 பேர் மதுரை அரசு மருத்துவமனையிலும், 6 பேர் தேனி அரசு மருத்துவமனையிலும், 3 பேர் மதுரை தனியார் மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டு சிகிசை அளிக்கப் பட்டு வருகிறது என்றார்.


இது தொடர்பாக, கமல் கோவையில் கூறுகையில்:- தீ விபத்து மீட்புப் பணிகள் துரிதமாக நடைபெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.


இதற்கு முன்னர் நீட் தேர்வு, டெங்கு, சசிகலா குடும்பத்தினரின் வீடுகளில் நடத்தப்பட்ட ரெய்டு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தமிழக அரசை கடுமையாக விமர்சித்த கமல் தற்போது, முதல் முறையாக தமிழக அரசின் செயல்பாடுகளை கமல்ஹாசன் பாராட்டியுள்ளார். 


இந்நிலையில், குரங்கணி காட்டுத் தீ விபத்தில் காயமடைந்து உயிரிழந்த நிஷா குடும்பத்துக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் நேரில் ஆறுதல் தெரிவித்துள்ளார். மடிப்பாக்கத்தில் உள்ள நிஷா வீட்டிற்கு சென்ற கமல்ஹாசன் பெற்றறோருக்கு ஆறுதல் கூறியுள்ளார்.