கால்நடை தீவன ஊழலின் 4-வது வழக்கில் முன்னாள் முதல்வரும் ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவருமான லாலு பிரசாத் யாதவுக்கு (வயது-69) 7 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 30 லட்ச ரூபாய் அபராதம் விதித்து கோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பீஹாரில் 1980 மற்றும் 1990-களில் கால்நடை தீவனம் வாங்கியதில் பல கோடி ரூபாய் ஊழல் நடந்தது. போலி பில்கள் கொடுத்து அரசு கருவூலத்தில் இருந்து பணம் எடுத்து ஊழல் செய்யப்பட்டது. இது தொடர்பாக ஐந்து வழக்குகளை பதிவு செய்த சி.பி.ஐ. இந்த வழக்கை ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள சி.பி.ஐ-யின் சிறப்பு நீதிமன்றத்தில் நடத்தினர். 


இந்த ஊழல் அனைத்தும் காங்கிரசின் ஜெகன்னாத் மிஸ்ரா மற்றும் ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் லாலு பீஹார் முதல்வர்களாக இருந்தபோது நடந்தவை. இதுவரை மூன்று வழக்குகளில் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. மூன்றிலும் லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி என தீர்ப்பு அளிக்கப்பட்டு சிறைதண்டனையும் வழங்கப்பட்டது. 


தும்கா கருவூலத்தில் இருந்து 3.13 கோடி ரூபாய் எடுத்தததாக தொடரப்பட்ட நான்காவது ஊழல் வழக்கில் மார்ச் 19 அன்று லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி என சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஷிவ்பால் சிங் அறிவித்தார். 


இதையடுத்து லாலுவுடன் அவரது ஊழலுக்கு உடந்தையாக இருந்த மேலும் 17 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்த நான்காவது வழக்கிலும் லாலுவுக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும் 30 லட்ச ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார்.