தமிழ் மக்கள் சித்திரை மாதத்தின் முதல் நாளை புதிய ஆண்டு பிறப்பதை புத்தாண்டாகக் கொண்டாடுகின்றனர். தமிழில் மொத்தம் அறுபது ஆண்டுகள் உள்ளது. ஒவ்வொரு ஆண்டுக்கும் தனித்தனிப் பெயர்கள் உண்டு. பிரபவ ஆண்டில் (முதல் தமிழ் ஆண்டு) தொடங்கி அட்சய ஆண்டில் (அறுபதாவது தமிழ் ஆண்டு) ஒரு சுற்று நிறைவடைந்ததும் மீண்டும் இன்னொரு பிரபவ ஆண்டில் அடுத்த வட்டம் ஆரம்பமாகும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்தவகையில், 31_வது தமிழ் ஆண்டான ஹேவிளம்பி நிறைவடைந்து 32_வது ஆண்டான விளம்பி தமிழ் ஆண்டு இன்று முதல் தொடங்கியுள்ளது.


இன்று புத்தாண்டு கொண்டாடும் தமிழக மக்களுக்கு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர். அதன் விவரங்களை பார்ப்போம்!!