சங்கு செல்வத்தின் அடையாளமாகும். நவக்கிரகங்களில் சந்திரன் ‘மனோகாரகன் ஆவார். இவரே மனிதர்களின் மனதில் எழும் எண்ணங்களை நிர்ணயிப்பவராக இருக்கிறார். இந்த சந்திரனை, சிவபெருமான் தலையில் சூடியுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சந்திரனுக்கு (Chandran) ‘சோமன் என்ற பெயரும் உண்டு. இதனால் சிவனுக்கு (Shivan) ‘சோமசுந்தரர் ‘சோமசேகரன் ‘பிறை நுதலான் என்ற பெயர்களும் உண்டு. மனக் குழப்பம் நீங்கி தெளிவு பிறக்க திங்கள்கிழமைகளில் சிவவழிபாடு செய்வது சிறப்பு பெறுகிறது.


ALSO READ | என்னது நந்தி சிலை இல்லாத ஒரு சிவாலயமா?... இது எங்க இருக்கு... சிறப்பு என்ன?..


 


சோமவார விரதம் வருடம் முழுவதும் அதாவது ஒவ்வொரு திங்கட்கிழமையிலும் கடைப்பிடிக்க வேண்டிய ஒன்று. சோமவார (Monday) விரதம் வருடம் முழுவதும் அதாவது ஒவ்வொரு திங்கட்கிழமையிலும் கடைப்பிடிக்க வேண்டிய ஒன்று. ஆனாலும் கார்த்திகை மாதத்துச் சோமவாரங்கள் (திங்கட்கிழமைகள்) தனிச் சிறப்பு மிக்கவை.



இந்த நாட்களில் சிவாலயங்களில் சங்காபிஷேகம் நடைபெறும். சந்திரசேகரர் பவனி விழா விமரிசையாக நடைபெறும். 108 அல்லது 1008 சங்குகளில் நீர் நிரப்பி, யாகசாலைகளில் வைத்து, வேள்வி செய்து, அந்த நீரால் சிவபெருமானுக்குத் திருமுழுக்காட்டு செயப்படும். 


ALSO READ | யார் யார் எத்தனை முகம் கொண்ட ருத்ராட்ஷம் அணியலாம்?... இதோ முழு விவரம்..!


கார்த்திகை சோமவார தினங்களில் இந்த வைபவத்தைத் தரிசிப்பதுடன், சிவாலயங்களில் அருளும் ஸ்ரீசந்திரசேகர மூர்த்திக்கு வெண்மை நிற மலர்கள் சூட்டி, வெண்பட்டாடை அணிவித்து வழிபட்டால், ஆயுள் பலம் பெருகும். விருத்தி அடையும். மன அமைதி கிட்டும். வம்சம் தழைத்தோங்கும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR