மறுசுழற்சி செய்து மீண்டும் பயன்படுத்தக்கூடிய காட்டன் சானிட்டரி பேட்களை தாயரிக்கும் 18 வயது கோயம்புத்தூர் பெண்..!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கோயம்புத்தூரைச் சேர்ந்த ஒரு பதினெட்டு வயது சிறுமி, மறு சுழற்சி செய்து மீண்டும் பயன்படுத்தக்கூடிய பருத்தி சானிட்டரி நாப்கின்களை தயாரிப்பதற்காக ஆன்லைனில் பாராட்டுக்களை பெற்று வருகிறார். சந்தையில் கிடைக்கும் சானிட்டரி நாப்கின்களை பயன்படுத்தியபின், அடிக்கடி உடல்நலப் பிரச்சினைகளை எதிர் கொண்டதை தொடர்ந்து, சுற்றுச்சூழல் நட்புரீதியிலான சானிட்டரி நாப்கின்களை தயாரிக்க இஷானா முடிவு செய்துள்ளார். 


பருத்தி சானிட்டரி பட்டைகள் தயாரிக்க, இஷானா ஒரு தையல் இயந்திரம் மற்றும் பிற அத்தியாவசிய உபகரணங்கள் உள்ளிட்ட தனக்கு தேவையான முழு பொருட்களுடன் அவற்றை தயாரிக்க ஆரம்பித்ததாக ANI செய்திநிருவனத்திடம் அவர் தெரிவித்துள்ளார். 



தனது புதுமையான யோசனையைப் பற்றி பேசிய இஷானா, "சாதாரண நாப்கின்கள் பயன்படுத்துவதால் உடல்நலப் பிரச்சினைகளை சந்தித்த பின் பருத்தி சுகாதார நாப்கின்களை தயாரிக்க நான் நினைத்தேன். இப்போது, பருத்தி துணியால் சானிட்டரி பேட்களை எவ்வாறு தயாரிப்பது குறித்து மேலும் பலருக்கு கற்பிக்க விரும்புகிறேன்". 


சாதாரண சானிட்டரி நாப்கின்களில் பயன்படுத்தப்படும் கெமிக்கல் ஜெல் பெண்களுக்கு ஆபத்தானது என்பதை நிரூபிக்க என்னால் முடியும் என்றும் இஷானா மேலும் கூறினார்.


"நான் உருவாக்கிய சுகாதார துடைக்கும் பருத்தி துணியின் அடுக்குகளால் ஆனது. இது மீண்டும் பயன்படுத்தக்கூடியது மற்றும் சுற்று சூழலுக்கு ஏற்றது" என்று அவர் கூறினார். இவருக்கு இணையதளத்தில் பலரும் தங்களின் ஆதரவையும் பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர். அவற்றில், சிலரது கருத்துக்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு பயனர், "ஆஹா சிறந்தது. இந்த திறமையான பெண்ணுக்கு வணக்கம் செலுத்துங்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.