பிரதமர் மக்கள்நலத் திட்டத்தின்கீழ் பயனாளிகளில் 68 விழுக்காட்டினர் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுள்ளதாகத் தெரியவந்துள்ளது! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மத்திய அரசின் சுகாதார பாதுகாப்பு ஆயுஷ்மான் திட்டத்தின் மூலம் 2.3 லட்சம் பேர் பயன் பெற்றுள்ளனர். அதில் குஜராத், தமிழகம், மகாராஷ்ட்டிரா, மேற்குவங்கம், சட்டீஸ்கர் டாப் 5 பட்டியலில் உள்ளன. மோடி கேர்' எனப்படும் ஆயுஷ்மான் பாரத் எனப்படும் தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டத்தை கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி பிரதமர் மோடி அறிவித்தார்.


சுமார் 10 கோடி ஏழைக்குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் வரையில், மருத்துவ செலவை மத்திய அரசே ஏற்கும். இந்த திட்டத்தில் உள்ள பயனாளிகள், அரசு அல்லது தனியார் மருத்துவமனையில் பணமில்லாமல் சிகிச்சை எடுத்து கொள்ளலாம். பிரதமர் மக்கள்நலத் திட்டம் என்னும் பெயரில் ஏழைகளுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை மத்திய அரசு செப்டம்பர் 23 ஆம் நாள் தொடங்கியது. இந்தத் திட்டத்தால் இரண்டுமாதக் காலத்துக்குள் 2 லட்சத்து 32 ஆயிரத்து 592 பேர் பயனடைந்துள்ளதாகத் தேசிய நலவாழ்வு முகமையின் புள்ளி விவரத்தில் குறிப்பிட்டுள்ளது.


இவர்களில் 68விழுக்காட்டினர் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுள்ளதாகவும் அந்தப் புள்ளி விவரம் குறிப்பிட்டுள்ளது. குஜராத், தமிழ்நாடு, மகாராஷ்டிரம், மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் அதிக எண்ணிக்கையிலானோர் பயனடைந்துள்ளனர்.